dinamalar telegram
Advertisement

சென்னை அணி முதல் வெற்றி: நாராயண் ஜெகதீசன் அரைசதம்

Share

சென்னை: சேலம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நாராயண் ஜெகதீசன் அரைசதம் விளாச சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

சேலம் அணிக்கு கேப்டன் டேரில் பெராரியோ (39), கோபிநாத் (33), விஜய் சங்கர் (32) ஆறுதல் தர, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. சென்னை சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கேப்டன் கவுசிக் (0), ராதாகிருஷ்ணன் (0), ராஜகோபால் சதிஷ் (1) ஏமாற்றினர். நாராயண் ஜெகதீசன் (52 ரன், 2 சிக்சர், 3 பவுண்டரி) அரைசதம் விளாசினார். சசிதேவ் (42), ஹரிஷ் குமார் (27*) கைகொடுக்க, சென்னை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.



மதுரை ஏமாற்றம்: மற்றொரு லீக் போட்டியில் மதுரை அணி (153/8, 20 ஓவர்) 19 ரன் வித்தியாசத்தில் கோவை அணியிடம் (172/5, 20 ஓவர்) வீழ்ந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement