dinamalar telegram
Advertisement

காலிறுதியில் மஹி ராகவ்: ஜூனியர் குத்துச்சண்டையில்...

Share

சோனிபட்: ஜூனியர் தேசிய குத்துச்சண்டை காலிறுதிக்கு ஹரியானா வீராங்கனை மஹி ராகவ் முன்னேறினார்.

ஹரியானாவின் சோனிபட் நகரில், 4வது ஜூனியர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் 63 கி.கி., பிரிவு முதல் சுற்றில் ஹரியானாவின் மஹி ராகவ், டில்லியின் கார்கி தோமரை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மஹி, கடந்த ஆண்டு சுவீடனில் நடந்த கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் ஹரியானாவின் தானு (52 கி.கி.,), ருத்ரிகா (70 கி.கி.,), சஞ்சனா (80 கி.கி.,) வெற்றி பெற்றனர். தமிழகத்தின் ஸ்ரீமதி (70 கி.கி.,), மஹாராஷ்டிராவின் ஜாக்ருதி போத்திடம் தோல்வியடைந்தார். மஹாராஷ்டிராவின் ஸ்ருஷ்தி ராஸ்கர் (57 கி.கி.,), சானா கான்சால்வ்ஸ் (63 கி.கி.,) வெற்றி பெற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement