dinamalar telegram
Advertisement

17.7 கோடி பேர் பார்த்த உலக 'பைனல்'

Share

துபாய்: உலக டெஸ்ட் பைனலை உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 17.7 கோடி பேர் பார்த்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த இதன் பைனலில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியை (ஜூன் 28-23) உலக அளவில் 89 பகுதிகளில் இருந்து 17.7 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதில் 13.06 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என, ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

இப்போட்டியை இந்திய ரசிகர்கள் தான் அதிகமாக பார்த்துள்ளனர். மொத்தம் 94.6 சதவீதம் பேர் கண்டு ரசித்தனர். இப்போட்டியின் 'ரிசர்வ் டே' ஆட்டத்தை நியூசிலாந்தில் உள்ள 2 லட்சம் பேர் பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்திலும் இப்போட்டியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். இங்கிலாந்து பங்கேற்காத போட்டிகளில் அதிகமாக பார்க்கப்பட்டது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தான்.

உலக டெஸ்ட் பைனல், ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகின் 145 பகுதிகளில் இருந்து, 6,65,100 பேர் பார்த்துள்ளனர். ஐ.சி.சி., 'பேஸ்புக்' மூலம் 42.3 கோடி, 'இன்ஸ்டாகிராம்' மூலம் 7 கோடி பேர் பார்த்துள்ளனர். 'ரிசர்வ் டே' ஆட்டத்தை 'பேஸ்புக்' வழியாக 6.57 கோடி பேர் கண்டு ரசித்தனர். இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த பெண்கள் 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலை 6.43 கோடி பேர் பார்த்திருந்தனர்.

இதுதவிர, ஐ.சி.சி., அலைபேசி செயலி, இணையதளம், 'டுவிட்டர்', யூடியூப் வழியாக 51.50 கோடி வீடியோ வியூவ்ஸ் கிடைத்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement