dinamalar telegram
Advertisement

கல்யாணந்தான் கட்டிக்கலாமா * டோக்கியோவில் ருசிகரம்

Share

டோக்கியோ: ஒலிம்பிக் வாள்சண்டை போட்டியில் பங்கேற்றார் அர்ஜென்டின வீராங்கனை மரியா பெரஸ் மவுரிஸ் 36. உலகின் 'நம்பர்-27' வீராங்கனையான இவர், ஹங்கேரியின் அனா மார்டினிடம் 12-15 என அதிர்ச்சித் தோல்வியடைந்தார். போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பத்திரிகையாளர்களிடம் விவரித்தார்.

அப்போது பின்னால் 'மாஸ்க்' அணிந்து கொண்டு, ஒரு சிறிய பேப்பருடன் நின்று கொண்டிருந்தார் மரியாவின் 17 ஆண்டுகால பயிற்சியாளர் சாசெடா. தவிர மரியாவை திரும்பிப் பார்க்குமாறு அழைத்தார். உடனடியாக திரும்பிய மரியாவுக்கு இன்ப அதிர்ச்சி. ' என்னை திருமணம் செய்து கொள்கிறாயா, ப்ளீஸ்...' என எழுதியிருந்தார் சாசெடா.

ஏற்கனவே கடந்த 2010ல் வாள்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இதுபோல கேட்டதற்கு, மரியா மறுத்திருந்தார். இதனால் என்ன ஆகுமோ என பதட்டத்தில் இருந்த சாசெடாவை, இம்முறை கண்ணீருடன் கட்டியணைத்து முத்தமிட்டு, திருமண கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் மரியா. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.உக்ரைன் வீராங்கனை 'சஸ்பெண்ட்'

உக்ரைனின் டிரையத்லான் வீராங்கனை யூலியா எலிஸ்ட்ரடோவா 33. ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வந்திருந்தார். இதனிடையே சமீபத்தில் (ஜூன் 5) சொந்தமண்ணில் நடந்த ஐரோப்பிய டிரையத்லான் கோப்பை தொடரில் பங்கேற்ற போது, யூலியாவிடம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதன் முடிவில், இவர் தடை செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட, போட்டியில் களமிறங்கும் முன் யூலியா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கொரோனா '169'

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதியதாக 16 பாதிப்பு கண்டறியப்பட்டன. இதில் விளையாட்டு நட்சத்திரங்கள் யாரும் இல்லை என கூறப்பட்டது. இதுவரை ஒலிம்பிக் தொடர்பாக மட்டும் 169 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.யார் பொறுப்பு

டோக்கியோவில் வெயில் கொழுத்துகிறது. காலையில் 30 டிகிரியாக இருக்கும் வெப்பநிலை மதிய நேரத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. இதனால் டென்னிஸ் போட்டிகளை இரவில் நடத்த வேண்டும் என 'நம்பர்-1' வீரர் ஜோகோவிச் கோரிக்கை விடுத்தார். இதனிடையே நேற்று, 'நம்பர்-2' வீரர் டேனில் மெத்வெடெவ் (ரஷ்யா), மூன்றாவது சுற்றில் இத்தாலியின் பாக்னினியை எதிர்த்து விளையாடினார். ஒரு செட் வென்ற நிலையில் வெயில் அதிகமாக இருந்தது.

அப்போது அம்பயரிடம் சென்ற மெத்வெடேவ்,' என்னால் போட்டியை முடித்து விட முடியும். ஆனால் அதற்குள் நான் இறந்து போயிருப்பேன். ஒருவேளை அப்படி நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது,'' என கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

* வெளியேறிய பவுலா

டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா, செக் குடியரசின் வன்ட்ரோசோவா மோதினர். முதல் செட்டை பவுலா 3-6 என இழந்தார். அடுத்த செட் துவங்கும் முன் அதிகமான வெயில் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் 'வீல் சேர்' உதவியால் வெளியேறினார்.தடை செய்ய வேண்டும்

டென்னிஸ் வீரர் மெத்வெடேவ், பத்திகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது ஒருவர்,'இந்த ஒலிம்பிக்கில் ரஷ்ய நட்சத்திரங்கள் ஏமாற்றுக்காரர்கள் என்ற பட்டத்தை சுமக்கின்றனரா,' என கேட்டார்.

இதனால் கோபமான மெத்வெடேவ்,'எனது வாழ்க்கையில் முதன் முறையாக, ஒரு கேள்விக்கு பதில் தரப் போவதில்லை. நீங்கள் உங்களையே அவமானப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை உங்களை இந்த ஒலிம்பிக் அல்லது டென்னிஸ் தொடர்களில் தடை செய்ய வேண்டும். எனது பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் உங்களை பார்க்கக் கூடாது,'' என்றார்.சிமோனுக்கு மன அழுத்தம்

அமெரிக்க ஜிம்னாஸ்டிஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ். ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் உட்பட 6 பதக்கம் வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் அணிகளுக்கான பைனலில் இருந்து திடீரென விலகினார். நேற்று நடக்க இருந்த 'ஆல் ரவுண்டு' தனிநபர் பைனலில் இருந்தும் வெளியேறினார். மனதிற்கு ஓய்வு தேவைப்படுவதால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement