மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை பெலாரசின் சபலென்கா, செக் குடியரசின் வன்ட்ரோசோவாவை சந்தித்தார். முதல் செட்டை சபலென்கா 4-6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர் அடுத்த இரு செட்டுகளை 6-3, 6-1 என கைப்பற்றினார். முடிவில் சபலென்கா 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
ருமேனியாவின் சிமோனா ஹாலெப், மான்டெக்னரோவின் கோவினிச்சை சந்தித்தார். இதில் ஹாலெப் 6-1, 6-1 என எளிதாக வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற மூன்றாவது சுற்று போட்டிகளில் போலந்தின் ஸ்வியாடெக், பிரான்சின் அலைஸ் கார்னெட், அமெரிக்காவின் கோலின்ஸ், பெல்ஜியத்தின் மெர்டென்ஸ், எஸ்தோனியாவின் கையா கனேபி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மெட்வேடேவ் கலக்கல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் 'நம்பர்-2' வீரர், ரஷ்யாவின் மெட்வெடேவ், நெதர்லாந்தின் வான் டியை 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தினார். கிரீசின் டிசிட்சிபாஸ், பிரான்சின் பெனாய்ட் பெய்ரேவை 6-3, 7-5, 6-7, 6-4 என்ற கணக்கில் போராடி வென்றார். மற்ற மூன்றாவது சுற்று போட்டிகளில் மினாயுர் (ஆஸி.,), சின்னர் (இத்தாலி) வெற்றி பெற்றனர்.
போபண்ணா ஜோடி தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டாரிஜா ஜோடி, 6-1, 4-6, 9-11 என உக்ரைனின் கி ேஷானக், கஜகஸ்தானின் ஆன்ட்ரி ஜோடியிடம் போராடி தோல்வியடைந்தது.
நான்காவது சுற்றில் சபலென்கா * ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!