dinamalar telegram
Advertisement

பைனலுக்கு முன்னேறினார் சிந்து: சையது மோடி பாட்மின்டனில்

Share

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

லக்னோவில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, ரஷ்யாவின் எவ்ஜெனியா கோசெட்ஸ்காயா மோதினர். முதல் செட்டை சிந்து 21-11 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட் துவங்குவதற்கு முன்பு, காயம் காரணமாக ரஷ்ய வீராங்கனை பாதியில் விலகியதால் சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பைனலுக்குள் நுழைந்தார்.



மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா, அனுபமா மோதினர். ஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய மாளவிகா 19-21, 21-19, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். பைனலில் மாளவிகா, சிந்து மோதுகின்றன.



மிதுன் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், பிரான்சின் அர்னாடு மெர்க்லே மோதினர். முதல் செட்டை 19-21 என இழந்த மிதுன், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-17 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர், 9-21 எனக்கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 24 நிமிடம் நீடித்த போட்டியில் மிதுன் 19-21, 21-17, 9-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement