dinamalar telegram
Advertisement

விதித், பிரக்ஞானந்தா 'டிரா': மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில்

Share

விஜ் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஆறாவது சுற்று போட்டியை இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் 'டிரா' செய்தனர்.

நெதர்லாந்தில், 84வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதில் 'நடப்பு உலக சாம்பியன்' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் 'ரவுண்டு ராபின்' முறையில் விளையாடுகின்றனர்.



இதன் ஆறாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாண்ட் மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 28வது நகர்த்தலின் போது 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, போலந்தின் ஜான்-கிரிஸ்டோப் டுடா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித் சந்தோஷ், 36வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.



மற்ற 6வது சுற்றுப் போட்டிகளில் நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் வெற்றி பெற்றனர். ஆறு சுற்றுகளின் முடிவில் விதித் சந்தோஷ், கார்ல்சன், அஜர்பெய்ஜானின் மமெத்யாரோவ் ஷாக்ரியார் தலா 4.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் பிரக்ஞானந்தா (2.5 புள்ளி) 9வது இடத்துக்கு முன்னேறினார்.



அர்ஜூன் வெற்றி: டாடா ஸ்டீல் சேலஞ்சர்ஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, அர்ஜூன் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன், 42வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஆறு சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். சூர்ய சேகர் கங்குலி, தலா 3.5 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement