dinamalar telegram
Advertisement

கேப்டனாக ராகுல், ஹர்திக்: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கு

Share

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இணைந்துள்ள புதிய அணிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா (ஆமதாபாத்), ராகுல் (லக்னோ) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 15வது சீசனில் ஆமதாபாத், லக்னோ என, இரு புதிய அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான 'மெகா' வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (பிப். 12-13) பெங்களூருவில் நடக்கவுள்ளது. இதற்காக சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 8 அணிகள் சார்பில் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது.



இந்த ஏலத்திற்கு முன்பு, இரு புதிய அணிகள் தலா 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்விரு அணிகள் சார்பில் தேர்வான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆமதாபாத் அணியில் இந்திய 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ஆப்கானிஸ்தான் 'சுழல்' வீரர் ரஷித் கான் (தலா ரூ. 15 கோடி), இந்தியாவின் சுப்மன் கில் (ரூ. 7 கோடி) தேர்வாகினர். லக்னோ அணியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் (ரூ. 17 கோடி), ஆஸ்திரேலிய 'ஆல்-ரவுண்டர்' மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ. 9.2 கோடி), இந்திய 'சுழல்' வீரர் ரவி பிஷ்னாய் (ரூ. 4 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் அந்த அணிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.



வீரர்கள் ஏலம்: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 1214 பேர் (896 இந்தியர், 318 வெளிநாட்டு வீரர்கள்) பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவின் அஷ்வின், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், ரெய்னா, ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், வார்னர், ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜேசன் ராய் உள்ளிட்டோருக்கு அடிப்படை ஏலத் தொகையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், விண்டீசின் கிறிஸ் கெய்ல் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement