dinamalar telegram
Advertisement

பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்

Share

பெங்களூரு: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய புனே அணி 37-35 என, பெங்களூருவை வீழ்த்தியது.

பெங்களூருவில், புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) எட்டாவது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்களூரு, புனே அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய புனே வீரர்கள், பெங்களூரு அணியினரை 'ஆல்-அவுட்' செய்ய 13-10 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி கண்ட பெங்களூரு அணியினர் 13-13 என, சமன் செய்த போதும் முதல் பாதி முடிவில் 15-16 என பின்தங்கி இருந்தது.



இரண்டாவது பாதியில் மீண்டும் பெங்களூரு வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த புனே அணி 22-17 என முன்னிலையை தொடர்ந்தது. கடைசி வரை போராடிய பெங்களூரு அணியினரால் மீள முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி வினாடியில் 'டை' செய்ய கிடைத்த வாய்ப்பையும் பெங்களூரு அணியினர் வீணடித்தனர்.

ஆட்டநேர முடிவில் புனே அணி 37-35 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புனே அணிக்கு மோகித் கயாத் (13 புள்ளி) கைகொடுத்தார். பெங்களூரு சார்பில் பவான் ஷெராவத் 10, பாரத் 6 புள்ளி பெற்றனர். புனே அணி, 12 போட்டியில், 5 வெற்றி, 7 தோல்வி என, 27 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 13 போட்டியில், 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு 'டை' என, 41 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.



மற்றொரு லீக் போட்டியில் மும்பை அணி 42-35 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement