லண்டன்: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 2ல் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் நாட்டிங்காம் (ஜூன் 10-14), லீட்சில் (ஜூன் 23-27) நடக்கவுள்ளன. இதன் முதலிரண்டு போட்டிகளுக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு சீனியர் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆஷஸ் தொடரில் மோசமாக தோற்றதால், இவர்கள் விண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. தவிர இந்த அணியில் ஹாரி புரூக், மாத்யூ பாட்ஸ் என இரு புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜாக் கிராலே, பென் போக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரெய்க் ஓவர்டன், ஜோனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், போப், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மாத்யூ போட்ஸ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!