புதுடில்லி: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார்.
அயர்லாந்து செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் (ஜூன் 26, 28) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. மற்றொரு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் மூன்று 'டி-20' (ஜூலை 7, 9, 10), மூன்று ஒருநாள் (ஜூலை 12, 14, 17) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட், வரும் ஜூலை 1-5ல் பர்மிங்காமில் நடக்கவுள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு தலைமை ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார். இதனையடுத்து அயர்லாந்து செல்லும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) தலைவர் வி.வி.எஸ்., லட்சுமண் நியமிக்கப்பட உள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் கரீபிய மண்ணில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் பங்கேற்ற இந்திய அணிக்கு ஆலோசகராக லட்சுமண் செயல்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சென்ற போது, என்.சி.ஏ., தலைவராக இருந்த டிராவிட் பயிற்சியின் கீழ் மற்றொரு இந்திய அணி, இலங்கை மண்ணில் ஒருநாள், 'டி-20' தொடரில் விளையாடியது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!