சாட்டோகிராம்: இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது.
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 397, வங்கதேசம் 465 ரன் எடுத்தன. பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்திருந்தது. கருணாரத்னே (18) அவுட்டாகாமல் இருந்தார்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (48) கைகொடுத்தார். மாத்யூஸ் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் திமுத் கருணாரத்னே (52) அரைசதம் கடந்தார். தனஞ்செயா டி சில்வா (33) ஆறுதல் தந்தார். பின் இணைந்த தினேஷ் சண்டிமால், நிரோஷன் டிக்வெல்லா ஜோடி வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபாரமாக ஆடிய டிக்வெல்லா அரைசதம் கடந்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 260 ரன் எடுத்திருந்த போது, போட்டியை 'டிரா' செய்ய இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். சண்டிமால் (39), டிக்வெல்லா (61) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் கைப்பற்றினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!