Load Image
dinamalar telegram
Advertisement

நெல்லை அணி மீண்டும் வெற்றி: சேலத்தை சுலபமாக வீழ்த்தியது

திருநெல்வேலி: நெல்லைக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் டேரில் பெராரியோ அரைசதம் கடந்து கைகொடுக்க சேலம் அணி 20 ஓவரில் 149 ரன் எடுத்தது.

தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 6வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.



சேலம் அணிக்கு ஜாபர் ஜமால் (11), கோபிநாத் (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த கவின், டேரில் பெராரியோ ஜோடி ரன் மழை பொழிந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ஹரிஷ் பந்தில் கவின் (48 ரன், 3 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த ரவி கார்த்திகேயன் (0), அபிஷேக் (1), கேப்டன் முருகன் அஷ்வின் (5), பிரானேஷ் (3) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய டேரில் பெராரியோ அரைசதம் கடந்தார்.



சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. பெராரியோ (60 ரன், 2 சிக்சர், 4 பவுண்டரி), கணேஷ் மூர்த்தி (1) அவுட்டாகாமல் இருந்தனர். நெல்லை அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.



அஜிதேஷ் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு சூர்யபிரகாஷ் (35), பாபா அபராஜித் (32) நம்பிக்கை தந்தனர். அஜிதேஷ் ஆட்டம் நெல்லை புகழ் அல்வா போல இனித்தது. இவர், சிக்சர் மழை பொழிந்தார். முருகன் அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜிதேந்திர குமார் வெற்றியை உறுதி செய்தார்.



நெல்லை அணி 17.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அஜிதேஷ் (48 ரன், 5 சிக்சர்), ஜிதேந்திர குமார் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சேலம் சார்பில் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement