Load Image
dinamalar telegram
Advertisement

மத்திய பிரதேசம் 'சாம்பியன்': ரஞ்சி கோப்பையில் வரலாறு

பெங்களூரு: ரஞ்சி கோப்பை அரங்கில் மத்திய பிரதேச அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. பைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 87வது சீசனுக்கான பைனல் நடந்தது. இதில் 41 முறை கோப்பை வென்ற மும்பை அணி, மத்திய பிரதேசத்தை எதிர்கொண்டது. முதல் இன்னிங்சில் மும்பை 374, மத்திய பிரதேசம் 536 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 113/2 ரன் எடுத்திருந்தது. அர்மான் ஜாபர் (30), சுவேத் பார்கர் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.



ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மும்பை அணியின் அர்மான் ஜாபர் (37) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சுவேத் பார்கர் (51) அரைசதம் கடந்தார். சர்பராஸ் கான் (45) ஓரளவு கைகொடுத்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (1), ஷாம்ஸ் முலானி (17), துஷார் தேஷ்பாண்டே (7) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, மும்பை அணி 2வது இன்னிங்சில் 269 ரன் எடுத்தது. மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட் கைப்பற்றினார்.



பின், 108 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே (1) ஏமாற்றினார். ஹிமான்ஷு (37), சுபம் சர்மா (30) நம்பிக்கை தந்தனர். பார்த் சஹானி (5) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரஜத் படிதர் (30*), கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா (1*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.



மத்திய பிரதேச அணி, 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை சார்பில் ஷாம்ஸ் முலானி 3 விக்கெட் வீழ்த்தினார்.



முதல் பட்டம்

ரஞ்சி கோப்பை அரங்கில் 2வது முறையாக பைனலுக்கு முன்னேறிய மத்திய பிரதேச அணி, முதன்முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 1998-99 சீசனில் பைனல் வரை சென்ற மத்திய பிரதேச அணி, கர்நாடகாவிடம் வீழ்ந்தது.



ஆறாவது முறை

மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டித், 6வது முறையாக ரஞ்சி கோப்பை வென்ற அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இதற்கு முன் இவர் பயிற்சியாளராக இருந்த மும்பை அணி 3 (2002-03, 2003-04, 2015-16), விதர்பா அணி 2 முறை (2017-18, 2018-19) கோப்பை வென்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement