Load Image
dinamalar telegram
Advertisement

அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான 3வது 'டி-20' போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் அயர்லாந்து வென்றது. மூன்றாவது போட்டி பெல்பாஸ்ட் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.\



ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஜ் (53), ஹஸ்ரதுல்லா ஜஜாய் (39) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இப்ராஹிம் ஜத்ரன் (36), நஜிபுல்லா ஜத்ரன் (42) கைகொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்தது. அயர்லாந்து சார்பில் ஜோஷ் லிட்டில் 2 விக்கெட் வீழ்த்தினார்.



கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் (0), கேப்டன் ஆன்டி பால்பிர்னி (0) ஏமாற்றினர். ஹாரி டெக்டர் (3), கர்டிஸ் கேம்பர் (8), கரேத் டெலானி (16) நிலைக்கவில்லை. லார்கன் டக்கர் (31) ஆறுதல் தந்தார். ஜார்ஜ் டாக்ரெல் (58*) அரைசதம் விளாசிய போதும் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை குர்பாஜ் வென்றார். அயர்லாந்து அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement