Load Image
dinamalar telegram
Advertisement

ஆசிய கோப்பை வெல்லுமா இந்தியா: ரிக்கி பாண்டிங் கணிப்பு

துபாய்: ''ஆசிய கோப்பை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் உள்ளது,'' என, பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 15வது ஆசிய கோப்பை ('டி-20') கிரிக்கெட் வரும் ஆக. 27 முதல் செப். 11 வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை ஆக. 28ல் சந்திக்கிறது. அதன்பின் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகும் அணியை ஆக. 31ல் எதிர்கொள்கிறது.



இத்தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் என, மூன்று 'வேகங்கள்' தேர்வாகினர். நான்காவது வேகப்பந்துவீச்சாளராக 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார்.



இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது: இந்திய அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்கிறார். டெஸ்ட் போட்டியில் இவரது பங்களிப்பு மகத்தானது. 'டி-20' போட்டியில் இவரை விட சிறந்த பவுலர்கள் உள்ளனர் என்று நினைக்கிறேன். இதனால் தான் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்காவது 'வேகமாக' இவரை தேர்வு செய்திருக்க வேண்டும்.

இம்முறை இந்திய அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற அணிகளை விட இந்திய அணியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. 'பேட்டிங்', 'பீல்டிங்', 'பவுலிங்' என திறமையான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.



இவ்வாறு பாண்டிங் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement