Load Image
dinamalar telegram
Advertisement

ராஸ் டெய்லருக்கு 'பளார்'

புதுடில்லி: 'ஐ.பி.எல்., தொடரின் 'டக்' அவுட்டானதால், அணி நிர்வாகி ஒருவர் எனது கன்னத்தில் பலமுறை அறைந்தார்,'' என ராஸ் டெய்லர் தெரிவித்தார்.

நியூசிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 38. சமீபத்தில் சுயசரிதை வெளியிட்டார். இதில்,'சக நியூசிலாந்து வீரர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டனர்,' என தெரிவித்து இருந்தார். தற்போது மற்றொரு 'திடுக்' தகவல் வெளியிட்டார்.

இதுகுறித்து சுயசரிதையில் அவர் கூறியது:

கடந்த 2011, ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினேன். பஞ்சாப் அணிக்கு (195/7) எதிரான போட்டியில் ராஜஸ்தான் (147/7) தோற்றது. இதில் நான் 'டக்' அவுட் ஆனேன். அன்று இரவு ஓட்டலில் மேல் தளத்தில் இருந்த பார் ஒன்றில், ஷேன் வார்ன், அவரது தோழி லிஸ் ஹர்லேயுடம் பேசிக் கொண்டு இருந்தேன். சக வீரர்கள், பயிற்சியாளர்களும் உடன் இருந்தனர்.

அங்கு வந்த அணி உரிமையாளர் ஒருவர்,' ராஸ்... பல லட்சங்களை உங்களுக்கு கொட்டிக் கொடுப்பது, 'டக்' அவுட்டாக அல்ல, என கூறி, சிரித்துக் கொண்டே எனது கன்னத்தில் 3, 4 முறை அறைந்தார். அவர் வேகமாக அறையவில்லை என்றாலும் அவர் நடிப்பதாக எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அப்போதுள்ள சூழலில் அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் தொழில்ரீதியிலான விளையாட்டு சூழலில் இதுபோன்ற நிலை ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இதன் பிறகு தான் பெங்களூரு அணிக்கு செல்ல விரும்பினேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement