Load Image
dinamalar telegram
Advertisement

மந்தனா அபார ஆட்டம்: 'தி ஹன்ட்ரடு' போட்டியில்

லண்டன்: 'தி ஹன்ட்ரடு' தொடருக்கான லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் அணியின் மந்தனா 46 ரன் விளாசினார்.

இங்கிலாந்தில், பெண்களுக்கான 'தி ஹன்ட்ரடு' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சதர்ன் பிரேவ், ஓவல் இன்விசிபிள்ஸ் அணிகள் மோதின. சதர்ன் பிரேவ் அணி சார்பில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா விளையாடினார். 'டாஸ்' வென்ற ஓவல் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.



சதர்ன் பிரேவ் அணிக்கு ஸ்மிருதி மந்தனா, டேனி வியாட் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மரிசான் கேப் வீசிய முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் மந்தனா. முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது வியாட் (14) அவுட்டானார். அபாரமாக ஆடிய மந்தனா, 25 பந்தில், 10 பவுண்டரி உட்பட 46 ரன் எடுத்தார்.

சதர்ன் பிரேவ் அணி 100 பந்தில், 8 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்தது.



கடின இலக்கை விரட்டிய ஓவல் அணி 100 பந்தில் 141/7 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



ஜெமிமா ஏமாற்றம்

லீட்சில் நடந்த மற்றொரு போட்டியில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி (127/4, 100 பந்து) 5 ரன் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை (122/7, 100 பந்து) வீழ்த்தியது. இப்போட்டியில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 5 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement