Load Image
dinamalar telegram
Advertisement

கோப்பை வென்றது நியூசிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி

கிங்ஸ்டன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் எழுச்சி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற நியூசிலாந்து, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி கிங்ஸ்டனில் நடந்தது.



'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (18), மிட்சல் சான்ட்னர் (13) சோபிக்கவில்லை. டேவன் கான்வே (21), கேப்டன் கேன் வில்லியம்சன் (24) ஆறுதல் தந்தனர். கிளென் பிலிப்ஸ் (41) ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், ஷமர் புரூக்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது பிரண்டன் கிங் (53) அவுட்டானார். ஜேம்ஸ் நீஷம் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ராவ்மன் பாவெல் வெற்றியை உறுதி செய்தார்.



வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து வெற்றி பெற்றது. புரூக்ஸ் (56), பாவெல் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.



கப்டில் முதலிடம்

சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மாவை (3487 ரன், 132 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் நியூசிலாந்தின் மார்டின் கப்டில். இவர், 121 போட்டியில், 2 சதம், 20 அரைசதம் உட்பட 3497 ரன் எடுத்துள்ளார். மூன்றாவது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் விராத் கோஹ்லி (3308 ரன், 99 போட்டி) உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement