Load Image
dinamalar telegram
Advertisement

கோவை அணி சாம்பியன்: மாவட்ட கிரிக்கெட் தொடரில்

தேனி: மாவட்ட கிரிக்கெட் தொடரில் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், 10 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.

தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான எஸ்.எஸ். ராஜன் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. தேனியில் உள்ள டி.என்.சி.ஏ., அகாடமி மைதானத்தில் நடந்த பைனலில் கோவை, திண்டுக்கல் அணிகள் மோதின.



'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. பொறுப்பாக ஆடிய முருகானந்தம், 29 பந்தில் 37 ரன் (7 பவுண்டரி) எடுத்து ஆறுதல் தர, திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன் எடுத்தது.



சுலப இலக்கை விரட்டிய கோவை அணிக்கு சுகேந்திரன் (68* ரன், 35 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), முகமது ஆசிக் (45* ரன், 36 பந்து, 3 சிக்சர், 3 பவுண்டரி) கைகொடுத்தனர். கோவை அணி 11.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 126 ரன் எடுத்து வெற்றி பெற்று, கோப்பை வென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement