Load Image
dinamalar telegram
Advertisement

தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு: போப் ஆறுதல் அரைசதம்

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் தென் ஆப்ரிக்க பவுலர்கள் அசத்தினர். பொறுப்பாக ஆடிய போப் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென் தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.



இங்கிலாந்து அணிக்கு அலெக்ஸ் லீஸ் (5), ஜாக் கிராலே (9) ஜோடி ஏமாற்றியது. ஜோ ரூட் (8) சோபிக்கவில்லை. ஆன்ரிச் நார்ட்ஜே 'வேகத்தில்' ஜானி பேர்ஸ்டோவ் (0), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (20), பென் போக்ஸ் (6) சிக்கினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய போப் அரைசதம் கடந்தார்.



முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 116 ரன் எடுத்திருந்த போது மழையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. போப் (61), பிராட் (0) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் நார்ட்ஜே 3, ரபாடா 2 விக்கெட் கைப்பற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement