Load Image
dinamalar telegram
Advertisement

ஆசிய கோப்பை: சாதிக்குமா இந்தியா

சில்ஹெட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8வது சீசன் இன்று முதல் வரும் அக். 16 வரை நடக்கிறது. இதில், ஆறு முறை சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என, 7 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டிகள் சில்ஹெட்டில் நடக்கின்றன.



ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் (அக். 13) மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள், அக். 16ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.



இந்தியா-பாக்., மோதல்: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. அதன்பின் மலேசியா (அக். 3), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அக். 4), பாகிஸ்தான் (அக். 7), வங்கதேசம் (அக். 8), தாய்லாந்து (அக். 10) அணிகளை சந்திக்கிறது. ஆசிய கோப்பை அரங்கில், இதுவரை நடந்த 7 பைனலிலும் விளையாடிய இந்திய அணி, 6 முறை (2004, 2005-06, 2006, 2008, 2012, 2016) வெற்றி பெற்று கோப்பை வென்றது. கடந்த 2018ல் மட்டும் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.



சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் மீண்டும் அசத்தினால் 7வது முறையாக ஆசிய கோப்பை வெல்லாம்.



இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்னே ராணா, ஹேமலதா, மேக்னா சிங், ரேனுகா தாகூர், பூஜா, ராஜேஷ்வரி கெய்க்வாட், ராதா யாதவ், கிரண்ட பிரபு நவ்கிரே.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement