Load Image
dinamalar telegram
Advertisement

உலக கோப்பை வென்றால் ரூ. 13 கோடி * மொத்த பரிசு எவ்வளவு

துபாய்: 'டி-20' உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 13 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் எட்டாவது 'டி-20' உலக கோப்பை தொடர், வரும் அக். 16-நவ. 13ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் நேரடியாக 'சூப்பர்-12' சுற்றில் பங்கேற்க உள்ளன.

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் (தகுதிச்சுற்று) பங்கேற்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் 4 அணிகள் 'சூப்பர்-12' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி 'குரூப் 2' ல் இடம் பெற்றுள்ளது. தனது முதல் மோதலில் அக்., 23ல் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இதனிடையே உலக கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை விபரங்கள் வெளியாகின. தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 46 கோடி. நவ. 13ல் நடக்கும் பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 13 கோடி தரப்பட உள்ளது.

இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 6.52 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்று வெளியேறும் இரண்டு அணிகளுக்கும் தலா ரூ. 3.26 கோடி தரப்படும். 'சூப்பர்-12' சுற்றுடன் கிளம்பும் 8 அணிகள் தலா ரூ. 57 லட்சம் பெறவுள்ளன.



ரூ. 33 லட்சம்

உலக கோப்பை தொடரில் முதல் சுற்று, 'சூப்பர்-12' சுற்றில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா ரூ. 33 லட்சம் கிடைக்கும்.

* முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ. 33 லட்சம் தரப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement