Load Image
dinamalar telegram
Advertisement

கோஹ்லியின் புதுமையான பயிற்சி

கவுகாத்தி: ''எனது வழக்கமான பயிற்சியாக மாறியுள்ள 'போம் ரோலிங்' முற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது,'' என கோஹ்லி தெரிவித்தார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கோஹ்லி 34. கடந்த இரு ஆண்டாக 'பார்ம்' இன்றி தவித்தார். சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன் விளாசி, மீண்டு வந்தார். இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களில் முதல்வன் ஆனார் கோஹ்லி (5 போட்டி, 276 ரன்). ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20' தொடரிலும் அரைசதம் அடித்தார்.

இவர், சமீபகாலமாக 'போம் ரோலிங்' முறையில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபடுகிறார். இது ஒருவகையான மசாஜ். உடலின் சதை இறுக்கங்களை தளர்த்தி, செல்களில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதுகுறித்து கோஹ்லி கூறியது:

பொதுவாக 'போம் ரோலிங்' பயிற்சியை அதிகம் செய்வதில்லை. ஆனால் இது தான் தற்போது எனது முக்கிய பயிற்சியாக மாறியுள்ளது. உடலின் முக்கிய பகுதிகளை துாண்டி விட்டு, முழு வேகத்துடன் செயல்பட கைகொடுக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐதராபாத் போட்டி துவங்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன், தீவிர உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டேன். அதேவேகத்தில் களமிறங்கி, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement