காக்ஸ் பஜார்: வங்கதேச 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி பவுலர்கள் ஏமாற்றினர்.
வங்கதேசம் சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், காக்ஸ் பஜாரில் நடக்கிறது. வங்கதேச 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 112 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 404/4 ரன் எடுத்திருந்தது. திலக் வர்மா (26), உபேந்திர யாதவ் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா 'ஏ' அணியின் திலக் வர்மா (31) 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார். ஜெயந்த் யாதவ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய உபேந்திர யாதவ் அரைசதம் கடந்தார். இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 465 ரன் எடுத்த 'டிக்ளேர்' செய்தது. உபேந்திர யாதவ் (71) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 3, கலீத் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச 'ஏ' அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் (21) சுமாரான துவக்கம் தந்தார். பின் இணைந்த ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அரைசதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்தியா 'ஏ' பவுலர்கள் திணறினர். ஆட்டநேர முடிவில் வங்கதேச 'ஏ' அணி ஒரு விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்து, 181 ரன் பின்தங்கி இருந்தது. ஜாகிர் (81), நஜ்முல் (56) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் சவுரப் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!