மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 3வது 'டி-20' போட்டியில் அசத்திய இளம் இந்திய பெண்கள் அணி (19 வயது), 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.
இந்தியா வந்துள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான நியூசிலாந்து பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி (19 வயது) வென்றது. மூன்றாவது போட்டி மும்பையில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு சவுமியா திவாரி (16), கேப்டன் ஸ்வேதா (20) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. திரிஷா (32), சோனியா மெந்தியா (38) கைகொடுத்தனர். ஹரிஷிதா பாசு (2), அர்ச்சனா தேவி (8), ஷிகா (1) ஏமாற்றினர். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் கெய்லி நைட் 4 விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஒலிவியா கெய்ன் (40) நம்பிக்கை தந்தார். இந்தியா சார்பில் டைட்டாஸ் சாது, சோனம் யாதவ், பர்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!