Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 50

அன்பு தோழமைகளே நலமா? ஒரு முறை பெரிய வியாபாரி ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பொழுது இவ்வாறு கூறினார் , "எங்களுடைய நிலையத்தில் வேலை செய்பவர்களில் அநேகமாக எல்லோரும் ஏணியின் அடியிலிருந்து தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர்களேயாவர். அவர்கள் முதலாளிகளின் நலனைக் கருதி பணியாற்றும் பொழுது தங்களுக்கே தாங்கள் இரட்டிப்பாக நன்மை செய்து கொள்கின்றார்கள். வாழ்வைத் துவங்கும் ஒவ்வொரு இளைஞனும் இதை நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும் அவர்கள் அவ்விதம் செய்வார்களானால் அவர்களுடைய வருங்கால வெற்றி நிச்சயமானதாகும் என்றார். வளமே வண்ணமாய்: தொழிலுக்கு தனிப்பட்ட கல்வி அவசியம் இல்லாத போதிலும் தொழில்முனைவோரின் அறிவு எவ்வளவு வளமுள்ளதாய் அமைகிறதோ அவ்வளவு அதிகமாக அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது ஆதலால் தொழில் முனைவோர் தன்னுடைய வியாபார வாழ்க்கைக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்வது எவ்விதமென்றால் போதிய கல்வி பெற்று தான் விரும்பும் தொழிலை நடத்த கூடிய தொழில் துவங்குவதற்கு தேவையான மூலதனமும், அனுபவமும் தேவை
வியாபார உலகில் முன்னேற விரும்புபவர்கள் தான் செய்யும் தொழிலை ஆதியிலிருந்து அந்தம் வரை அணுஅணுவாக அறிந்திருக்க வேண்டும், திட்டம் தீட்டி அதனைத் திறமையுடன் செயலாற்றத் தெரிய வேண்டும் .இதை தவிர வேறெந்த விசயமும் முக்கியமானதாக இருக்கக்கூடாது , ஆற்ற இயலாத செயல், தாண்ட முடியாத தடை என்று சோர்த்து போகக்கூடாது. இன்று எங்கும் உழைக்காது ஊதியம் பெற விரும்பும் நபர்கள் கணக்கின்றி காணப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு இலகுவானதை விருப்பமானதைச் செய்து விட்டு கடினமானதை விட்டு விடுகின்றனர். சிலர் நம்பிக்கையுடன் செயலாற்றுவர் உரிய நேரத்தில் உரிய காரியங்களை இயந்திரம் போன்று செய்வர் எனினும் அவர்களிடம் புதிய எண்ணங்களை புகுத்த முடியாது அவர்களாகவும் அவற்றை அறிந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் மற்றவர்களோ நொடியில் விஷயங்களைக் கவனித்து அவற்றைச் செயலாற்றி முன்னேறிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய மூளை எப்போதும் திறந்தவண்ணமிருக்கும் தாகமுள்ளவர்கள் தண்ணீர் அருந்துவது போன்று அவர்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவு பெறுகின்றனர் மக்களின் தேவையை அறிந்து தொழில் துவங்கும் பொழுது அது வெற்றிக்கு இட்டு செல்லும். 175 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவர் பெல்பாஸ்ட்டிலிருந்து பிழைப்பின் நிமித்தம் நியூயார்க் வந்து சேர்ந்தார் . அவர் ஒரு பெட்டியில் ஊசி , நூல், பொத்தான் ஆகியவற்றை வைத்துக் கொண்டு அவற்றை விற்பதற்காக வீடு வீடாக சென்றார் . ஆனால் அவை போதிய அளவு விற்பனை ஆகவில்லை.எனவே அந்த இளைஞர் தனக்கு தானே பேசிக்கொண்டார், இனிமேல் நான் ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள பெண்களை சந்தித்து அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து அவற்றை வாங்கி விற்பனை செய்வேன் என்று கூறியது மட்டுமில்லாது செயலிலும் இறங்கினார், சில நாட்களில் சிறய கடையை ஆரம்பித்தார் நாளடைவில் உலகிலேயே பெரிய வியாபார நிலையமாகி விட்டது. எனவே மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிவதே தொழில்முனைவோரின் முதல் வேலையாகும். தீட்டுவோம் திட்டங்களை:புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் தமது வியாபாரத் திட்டங்களை தயாரித்துக் கொள்வதில் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கான சில டிப்ஸ் இதோ அடிப்படை வியாபாரக் கருத்து. வியாபார சுயவிபரத் தகவல்: அதை வரையறுத்து விவரிக்கவும். அத்துடன் அதை எவ்வாறு தொடருவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் சரியாக விவரிக்கவும்வியாபாரக் கருத்தின் தனிச்சிறப்புகள் மற்றும் சாத்தியவளங்கள் வியாபாரத்தின் பிரத்யேகப் பண்பை பற்றி அதாவது "What, where, why, how என்ன, எங்கே, ஏன், எப்படி "எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அணுகுமுறை பயனுள்ளதாக அமையும் செயல் திட்டங்கள் வியாபாரத்தின் ஆரம்பத்தில் நம்முடன் இருப்பவர்கள் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட சுயவிபரக் கோவை ஒன்றையும் நம்முடைய சுயவிபரக் கோவை ஒன்றையும் தயாரித்துக் கொள்ள வேண்டும். . விற்பனையாளர்கள், கடன்வழங்கநனர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளடங்களாக நாம் தொடர்பு வைத்திருக்கும் அனைவரின் தகவல்கள்களையும் தயாரித்துக் கொள்ளவேண்டும் .சந்தைப்படுத்தல் திட்டம் மற்றும் விரிவாக்கல் திட்டங்கள் நம்முடைய வியாபாரத் திட்டம் நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக அமையும் . அது நம்முடைய நோக்கத்தை வரையறுத்து ஒருமுகப்படுத்தும். வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்கள் உள்ளடங்களாக முக்கியமான உறவுகளைக் கையாள மிகவும் பயனுள்ளதாக அமையும். வியாபாரத் துறையில் உள்ளவர்கள் உட்பட மக்களிடம் ஆலோசனையையும், கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். . நம்முடைய தொழிலில் காணப்படும் பலவீனங்களைக் கண்டறிய இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். நல் எண்ணங்களே நல் ஆட்சியாய்: சிறந்த தொழில்முனைவோரின் குறிக்கோள் என்பது மக்களின் நன்மைக்காக உழைப்பதாகவே இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான விஷயங்களை தரமாக குறைந்த விலையில் பூர்த்தி செய்தால் அந்த தொழில் சிறந்தோங்கும் என்பதில் ஐயமில்லை..ஒரு சிறந்த தொழில்முனைவோர் லாபத்தை விட சேவைக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் , ஆனால் அதற்காக வேண்டி சேவை சேவை என்றுக் கூறிக்கொண்டு லாபத்தை மறந்து விடக்கூடாது . லாபம் கிடைக்காவிடின் நாம் நீடித்து சேவை செய்ய முடியாது . சேவை மனோபாவத்துடன் திறமையாகத் தொழிலை நடத்தினால் லாபம் தானாகவே வந்து சேரும் . திட்டமிட்ட குறிக்கோள் என்கின்ற விதையை நம் ஆழ்மனதில் விதைக்க வேண்டும். புதியது உருவாக்கும் சிந்தனை வாயிலாக இந்த விதைக்கு உயிரூட்டி வளரச்செய்து முதிர்ச்சியடைய வைக்க முடியும் , நம் மனதில் வெறுப்பு, பகை உணர்வு, பொறாமை, சுயநலம் போன்றவை காணப்பட்டால் நம் மனதிலுள்ள விதைகளை பிடுங்கிப் போட்டுவிடும். எனவே, முழுமையான நம்பிக்கையுடனும் நல்ல எண்ணங்களுடனும் குறிக்கோளை அடைய நாம் உழைக்க வேண்டும். ஆ .ரோஸ்லின் 9842073219

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement