Advertisement

கூட்டு குடும்ப முறையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்!

பண்டை காலத்தில் இருந்து, இந்திய சமூகத்தில், குடும்பம் என்பது, கலாசாரத் தொகுப்பின் அடையாளமாக உள்ளது. இந்திய கலாசாரத்தில், முக்கிய அம்சமாக இருந்த, கூட்டுக் குடும்ப முறை, நகர்ப்புற மற்றும் மேற்கத்திய கலாசாரத்தால் பாதிக்கப்பட்டது.நகர்ப்புறங்களில், கணவன் - மனைவி, அவர்களது குழந்தைகள் மட்டுமே வசிக்கும், 'நியூக்ளியர்' குடும்பங்கள் உருவானதால், கூட்டுக் குடும்ப முறையில் இருந்த, சமூக பொருளாதார பாதுகாப்பு குறைந்தது.இன்றைய வாழ்க்கை முறையானது, கூட்டுக் குடும்ப முறையின் கலாசார மதிப்புகள், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை பாதுகாப்பதில், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதை உணர்கிறேன்.இந்தியர்களான நம் மரபணுவில், 'உலகம் ஒரே குடும்பம்' என்ற கருத்து ஆழமாக கலந்துள்ளது. இந்த பழமையான கோட்பாட்டை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது, நம் கடமை.இன்றைய இளைஞர்களுக்கு, கூட்டுக் குடும்பம் மற்றும் நியூக்ளியர் குடும்பத்துக்கும் இடையில் உள்ள, நன்மை, தீமைகளை எடுத்துக் கூற வேண்டும்.சமூகங்கள் மாறும் போது, முற்போக்கான பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை கொண்டு வரும் எந்தவொரு செயல்முறையும், அனைவராலும் வரவேற்கப்பட வேண்டும்.உதாரணமாக, கல்வியின் மூலம், பிற்போக்குத் தனமான குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மூட பழக்கவழக்கங்கள் போன்ற சமூக பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.கல்வியை கற்பதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் மட்டுமல்லாமல், குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள், ஆணாதிக்க சமுதாயத்தையும் எதிர்த்து போரிடும் துணிச்சல் ஏற்படுகிறது.ஒரு பெண்ணை படிக்க வைப்பது, ஒரு முழு குடும்பத்தையே படிக்க வைத்தது போலாகும். இது, ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடிப்படை தேவை.கூட்டுக் குடும்பத்தின் முக்கிய நன்மை, உடன் பிறப்புகளுடனும், உறவினர்களுடனும் ஏற்படும் பிணைப்பு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.நியூக்ளியர் குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு அந்த உணர்வு கிடைப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களில் பாசம் மற்றும் நல்லியல்புகள், குழந்தைகள் மத்தியில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.வயதானவர்களை மதிப்பது மற்றும் பாதுகாப்பது, இந்திய குடும்ப முறையின் மைய கொள்கை. ஆனால், வயதானவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வு, கவலையளிக்கிறது. நியூக்ளியர் குடும்பங்களின் குடியிருப்பில், போதுமான இட வசதி இல்லாமை, உலக தர வாழ்க்கை, குழந்தைகள் வெளிநாடுகளில் இருப்பது என, பல காரணங்கள் உள்ளன.வயதானவர்களை புறக்கணிப்பது, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நீண்ட கால நன்மையை அளிக்காது. இத்தகைய நிகழ்வுகளை சமாளிக்க, அரசு சட்டங்களை இயற்றியுள்ளது.இளம் வயதில், குடும்ப முறையானது, ஒற்றுமையான, வலுவான உறவை உருவாக்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குடும்ப அமைப்பு, சமூக ஒற்றுமை மற்றும் ஜனநாயக சிந்தனைக்கு வித்திடுகிறது.ஒரு சமூகத்தில், கலாசார மற்றும் சமூக மதிப்பை உயர்த்துவதில், குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.கடந்த, 1989, டிசம்பரில், ஐ.நா., பொது குழுவில், 'சர்வதேச குடும்ப ஆண்டு' கடைபிடிக்க உறுதியேற்கப்பட்டது. 1993ல், ஒவ்வொரு ஆண்டும், மே 15ம் தேதியை, சர்வதேச குடும்ப தினமாக கடைபிடிக்க, பொதுக் குழு முடிவு செய்தது.'உலகம் ஒரே குடும்பம்' என்ற பழமையான தத்துவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், மனித நேயம், இரக்கம், பெருமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய குடும்பம், ஒரு இணக்கமான, உள்ளடக்கிய சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கும்.குடும்பம், உலக கண்ணோட்டத்தை வடிவமைத்து, தனி நபர்களின் மதிப்பு முறையை வலுவாக்குகிறது. அதன் விளைவாக, வரவிருக்கும் ஆண்டுகளில், நாம் அனைவரும் விரும்புகின்ற, ஒரு நிலையான, அமைதியான, வளமான உலகை உருவாக்க முடியும்.
வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • skv - Bangalore,இந்தியா

    ஆஹா அது ஒரு இன்பமான இனிய பொற்காலம் தாத்தாபாட்டி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா என்றும் தாய் வலியுறவுகளும் அக்கம்பக்கமலே இருந்தாங்க வீட்டுலே திருமணம் என்றால் மொய்க்காக நடக்கலீங்க எல்லாதிருநாளும்உறவுகள் கூடி செய்தொம் இப்போதான் பாரின்க்கே போயிடுறாங்க கிராமவாழ்க்கை என்றால் அலேர்ஜியாமில்லே பலத்துக்கும் ப்ராமிஸ் வீடுகளில் கிளவாதான் இருக்காங்க பெற்றவைகளெல்லாம் பாரின்க்கு போயிடுறாங்க சில பசங்க அமெரிக்கால வேலைகிடைக்கலேன்னு வேலைக்குப்போகாமல் திமிரா வூட்டுலே குந்தின்னு சோம்பேறியா நிக்குதுங்க அதே விவாசாயக்குடும்பத்ததுலே பொறந்துட்டு படிச்சுட்டு வேலைகிடைக்கலேன்னா தைரியமா மண்ணுளே இறங்கிடுறானுகளே பொய்யான ப்ரேஸிடீஜேபார்த்து தான் நாசமாவுறானுக இந்த பிராமின் பசங்க , MTEK படிச்சுட்டு தன தந்தியுடன் வைதீகம் பார்க்கும் பசங்களும் இருக்காங்க ஒருவர் நாதஸ்வரக்கலைஞராவே இருக்கார் பொண்ணுகள் கூட அக்ரீ படிச்சுட்டு விவசாயம் பாக்குதுங்க என்பதுதான் உண்மை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement