Advertisement

மனோஜ் பையா...


மனோஜ் பையா...


சமீபத்தில் இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் கோவிலுக்கு சென்று வந்தேன்

ஜாகேஷ்வர் என்பது ஒரு ஆதி சிவன் கோவில்.

உத்தர்கண்ட் மாநிலத்தின் இமயமலைத்தொடரின் ஓர் பள்ளத்தாக்கி்ல் 7-8 ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது.

மலை உச்சியில் விருத்த ஜாகேஷ்வர் ஆலயமும், 14கிமீட்டருக்குக் கீழே, ஜாகேஷ்வர் ஆலயமும், அப்படி ஒரு பழமையான அழகுடன் அமைந்திருக்கின்றது.

இந்த கட்டுரையில் சொல்ல வந்ததது ஜாகேஷ்வர் ஆலயத்தைப்பற்றி அல்ல, அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்ற கார் ஒட்டுனர் மனோஜ் பையாவைப்பற்றிதான் சொல்லவந்தேன்.

"சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் எங்களுக்கு சிவன் மாதிரி. இங்கு உள்ள எல்லாக்காட்டிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை கூட எங்களுக்குத் தெரியும்.யாரும் தொட முடியாது. முதிர்ந்து விழும் தேவதாரு கட்டையை மட்டுமே பயன்படுத்துவோம் ." என்றார். கூடவே "இவ்வளவு அழகான இமயத்தில் நட்சத்திர ஒட்டலும் அடுக்குமாடி கட்டிடமும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறோம், வர்த்தக நோக்கில் பணம் வரும் என்றாலும் சூழல் நோக்கில் பூமி சீர் கேடடையும் பணத்தைவிட இந்த பூமி பெரிது இல்லையா சார். மீறி பெரிய கட்டிடங்கள் வந்தால் நாம் நம் பூர்விக நிலத்தின் பொலிவை அழகை துாய்மையை இழந்துவிடுவோம் ஆகவே எங்களுக்கு பிறகும் இந்த இயற்கையை பாதுகாக்கவேண்டுமடா பிள்ளைகளே என்று சொல்லி சொல்லியே எங்கள் பிள்ளைகளை வளர்க்கிறோம் என மனோஜ் சொன்ன போது அவருடைய சூழலியல் புரிதல் நெகிழ வைத்தது.

வட மாநிலங்களில் ஒடும் பல ஆறுகளின் துவக்கம் உள்ள இந்த மாநிலத்தில் மலைகளில் உள்ள பல்வேறு சுனைகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.அந்த ஆரம்பத்தற்கு வளர்ச்சி திட்டங்களை எங்கே தடையாகிவிடுமோ? என மனம் பதைபதைக்கிறார்.

இயற்கை கொட்டிக்கிடக்கும் இந்த இமயத்தின் இயற்கை அழகு இன்னும் பல தலைமுறைக்கு சென்றடையவேண்டும் என்ற அக்கறை அவரது ஒவ்வொரு அனுவிலும் இருக்கிறது.

இதே பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில்தான் இவரது குடும்பம் இருக்கிறது இவரது பிள்ளைகள் மலைப்பாதை வழியாக தினமும் நான்கு கிலோமீட்டர் துாரத்திற்கு நடந்து போய்தான் படித்து திரும்பவேண்டும் சைக்கிள் கூட ஒட்டமுடியாது படிக்கிற பிள்ளைகள் சார்பாக பாதை போட்டுத்தரக் கோரி கிராமத்தினர் மனு கொடுத்தால் பரீசிலிப்பார்கள் பாதையும் போடுவார்கள் அது பி்ன்னர் ரோடாகும் வாகனங்கள் வந்து போகும் மொத்தத்தில் இமயத்திற்கும் இயற்கைக்கும் காயம் ஏற்படும் அதனால் பிள்ளைகள் நடந்து போய் படித்துவரட்டும் ஒன்றும் தப்பில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்கிறார் இந்த இயற்கை நேசிப்பாளர்.

எப்போது துாங்குவார் எப்போது எழுந்திருப்பார் என்பதே தெரியாது அதிகாலை நான்கு மணிக்கு என்றாலும் சிரித்தபடி படு சுறுசுறுப்பாக பயணிகளுக்கு சேவை செய்ய தயராக நிற்பார்.இங்குள்ள இடத்தின் ஒவ்வாரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி எத்தனை குகைகள் உண்டென தொல்பொருள் துறைக்கு தெரிகிறோத இல்லையோ இவருக்கு அதெல்லாம் அத்துப்படி.

இயற்கையை இந்த அளவு மனதளவில் நேசிக்கும் ஒருவரை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது மனதார பராட்டிவிட்டு வந்தேன்.உங்களுக்கும் பாராட்ட தோன்றினால் அவரது எண் இதுதான் அவருக்கு தமிழ் தெரியாது நிறைய இ்ந்தியும் கொஞ்சமும் ஆங்கிலமும் தெரியும் 919412959018

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - bengalooru,இந்தியா

    சூழலியல் பற்றிய உண்மையான சிந்தனை இருந்திருந்தா, உங்களை நடத்தி தான் அவரின் பகுதியை காட்டியிருக்க வேண்டும் சார், ஆனால் கார்பன் புகையை வெளியிடும் வாகனத்தை வைத்தல்லவா அவரு காட்டியிருக்காரு, ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement