Advertisement

எங்களுக்கும் வாழ்வுவரும்...

கிட்டத்தட்ட ஒரு வருட கால உழைப்பிற்கு கடந்த வாரம் பயன் கிடைத்தது,ஆம் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஒதுங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளிகளை ஜோடி சேர்த்து அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு சுபமாக நடந்துமுடிந்தது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள கீதாபவன் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறது.திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு தங்கத்தாலி பட்டுப்புடவை பட்டு வேட்டி சட்டை உள்ளீட்ட 51வகை சீர்வரிசையுடன் அவர்களுக்கான இரண்டு மாத கால மளிகை சாமான்கள், திருமண பதிவு, வேலைவாய்ப்பு உள்ளீட்ட பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வதால் இவர்கள் மூலமாக திருமணம் செய்து கொள்ள நிறைய மாற்றுத்திறனாளிகள் விரும்புவர்.

இதில் ஏற்கனவே திருமணம் ஆனவர், தீராத நோய்கொண்டவர், குறிப்பிட்ட வயதைத்தாண்டியவர்கள் பொய் சொல்லி திருமணம் செய்துகொள்ள முற்படுவர் என்பதால் சரியான ஜோடிகளை தேர்ந்து எடுத்துதரும் பொறுப்பை தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அமைப்பிடம் கீதாபவன் அறக்கட்டளை ஒப்படைத்தது.

மாற்றுத்திறனாளி அமைப்பின் தலைவர் சிம்மசந்திரன் இதனை ஒரு வேலையாக கருதாமல் வேள்வியாக எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளி அமைப்பினருடன் இணைந்து சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி விருப்பமுள்ளவர்களை சென்னைக்கு வரவழைப்பார்.

இங்கு மருத்துவ பரிசோதனை உள்ளீட்ட பல பரிசோதனைகளும் அவர்கள் சம்பந்தப்பட விசாரணைகளும் நடத்தப்பட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் திருமணம் நடத்திவைக்கப்படும்.

இதற்கு சரியாக ஒரு வருடமாகிவிடும் இந்த ஒரு வருடமாக எங்கெங்கு சுயம்வரம் நடக்கிறது என்பதை செய்தியாக தெரிவித்து அதனை மாற்றுத்திறனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியினை தினமலர் நிஜக்கதை பகுதி அணிலின் தொண்டாக செய்துவருகிறது.

இந்த வருடம் திருமணத்திற்கு தகுதியான 51 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த வாரம் சென்னையி்ல் திருமணம் நடபெற்றது.திருமணத்தை முன்னின்று நடத்த ஒப்புக்கொண்டு வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் பெயருக்கு ஒரு ஜோடியை ஆசீர்வாதித்து சென்றுவிடுவார் என நினைத்தபோது, ஒவ்வொரு மாற்றுத்திறனாளி தம்பதியினர் இருக்குமிடத்திற்கே சென்று அவர்களிடம் உற்சாகமாக பேசி ஆசீர்வாதித்து அவர்கள் மனதில் மட்டுமின்றி விழா நடத்தியவர்கள் அனைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.

அடுத்த வருட திருமணத்திற்கு இதோ சிம்மசந்திரன் இப்போதே தயராகிவிட்டார் திருமணமாகத ஏழை எளிய மாற்றுத்திறனாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் சிம்மசந்திரனை தொடர்புகொண்டு பேசவைக்கலாம் அவர்களுக்கும் வாழ்வு வரும் அது உங்களுக்கு சந்தோஷம் தரும்.சிம்மசந்திரன் எண்:9962711174.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • HEMAPRIYA - thiruvannamali,இந்தியா

    மிக்க நன்றி என்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • MaRan - chennai,இந்தியா

    தொடர்ந்து சேவை ஆற்றிவரும் சிம்மாசந்திரன் மற்றும் அவரின் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்,,வாழ்த்துகள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement