Advertisement

ஒரு வீடு,ஒரு மரம்,ஒரு மூதாட்டி

கஜா புயல் பலரது வாழ்க்கை பதம் பார்த்து உள்ளது

அதில் ஒருவரான ஈஸ்வரி தான் பாதிக்கப்பட்டாலும் பராவாயில்லை சாய்ந்துவரும் மரத்தை பாதுகாக்க முடியுமா? பாருங்களேன் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் உள்ள பெரிய புளியமரம் உள்ளது,அந்த மரத்தை அசைத்த புயல் அதனை கிழே தள்ளியது.மரத்தின் அடியில் மூதாட்டியான ஈஸ்வரி என்பவர் குடிசை போட்டு தங்கியுள்ளார்,அந்தக்குடிசையின் கூரையை பதம் பார்த்த மரம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது.

ஈஸ்வரியம்மா தான் சிறுமியாக இருந்த காலத்தில் இருந்து இந்த மரத்தின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்து ரசித்திருக்கிறார் தனக்கு மூத்த சகோதரர் போல இந்த மரத்தை பாவித்திருக்கிறார்

இப்போது இந்த மரம் சாய்ந்ததும் ஒடோடிப்போய் தன்னால் முடிந்த வரை சிறு மரங்களை சேகரித்து மரம் மேற்கொண்டு சாயாமல் முட்டுக்கொடுத்து வைத்துள்ளார்.

மரத்தையும், அதன் பருமனையும், சாய்ந்துள்ள விதத்தையும் பார்ப்பவர்கள் யாரும் மரத்தின் பக்கத்தில் போகக்கூட அஞ்சுவார்கள் ஆனால் இந்த ஈஸ்வரியம்மா மரத்தின் கிழேயே உட்கார்ந்து நாட்களை கடத்திவருகிறார்.

யாராவது பெரிய அதிகாரிகள் குழுவாக வந்து இந்த மரத்தை பழையபடி நிமிர்த்தி வாழவைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்.

தனக்கும் தனது வீட்டிற்கும் ஏதாவது நேரிட்டாலும் பராவாயில்லை ஆனால் இந்த மரம் பிழைத்தால் போதும் என்ற மூதாட்டியின் எண்ணம் ஈடேறுமா?

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    ஓ பி ஸ் ஈ பி ஸ் ஸ்டாலின் வாசன் கம்யூனிஸ்ட்டுகள் திருமா , வைக்கோ தமிழிசை போன்ற அரசியல் தலைவர்கள் கலெக்டர் , என யாருமே வரவில்லையா ? என்ன கொடுமை .அந்த பாட்டி எப்படி தனியாக இருக்கிறார்கள் அவர் உணவுக்கு என்ன வழி என யாராவது சிந்தித்தார்களா ? தினமலர் பத்திரிக்க்கையாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பது ஏன் விருப்பம் .

  • sam - Bangalore,இந்தியா

    இப்படியும் ஒரு பாட்டி ...very nice.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement