Advertisement

தென்னையைப் பெற்றாலும் கண்ணீரு...

கஜா புயலால் கிட்டத்தட்ட 2 கோடி மரங்கள் சேதமடைந்து உள்ளது இதில் 60 லட்சம் மரங்கள் முற்றிலும் சாய்ந்துவிட்டது அதாவது இனி எந்த பிரோயோசனமும் இல்லாமல் மாய்ந்துவிட்டது.
தற்போது நாங்கள் எங்களை காப்பாற்றிக் கொள்ளவே முடியவில்லை கயைில் காசில்லாமல் நிவாரண முகாம்களில் தங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம் ஆகவே சேதமடைந்த மரங்கை காப்பாற்ற முடியுமா? என்பது தெரியில்லை.

நிவாரண முகாம்களில் இருந்து திரும்பிய பிறகு எப்படி வாழ்க்கை துவங்க போகிறோம் என்றே தெரியவில்லை காரணம் எங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த தென்னைகளை இழந்து தவிக்கிறோம்..

தென்னை மரங்கள் வளர்ந்து காய்ப்பு தருவதற்கு 5 முதல் 7 ஆண்டுகளாகும். ஒரு ஏக்கரில் 8 முதல் 9 முறை காய்கள் வெட்டப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் 1.80 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். இந்த வருமானம் இப்போது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மரங்களை பிழைக்க வைக்க வாய்ப்பு இல்லாததால், அனைத்தையும் அப்புறப்படுத்துவதற்கு ஏக்கருக்கு கிட்டத்தட்ட ரூ.30,000 செலவாகும். மீண்டும் புதிதாகத் தென்னங்கன்றுகளை வைத்து உருவாக்குவதற்கு சுமார் ரூ.30,000 தேவைப்படும். இவை வளர்ந்து காய்ப்பதற்குக் குறைந்தது 5 ஆண்டுகளாகும். அதுவரை வருவாய் இருக்காது. மேலும், இவ்வளவு செலவை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியவில்லை. தென்னை மரங்களின் வேர்கள் பல அடி ஆழத்துக்கும், பரவலாகவும் செல்லக்கூடியவை. எனவே, தென்னையை அழித்துவிட்டு, வேறு சாகுபடிக்கும் செல்ல முடியாது. ஆனால், மீண்டும் தென்னை சாகுபடியைத் தொடங்குவதற்குக் கையில் பணம் இல்லை.



எனவே, தென்னை சாகுபடி மூலம் எதிர்காலத்தை நம்பி இருந்த நிலையில், வாழ்க்கையில் பேரிடி விழுந்தது போன்று உள்ளோம். குழந்தைகளை படிக்க வைப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள இழப்பிலிருந்து மீள்வதற்கு, ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினால் தான் ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும் என்கின்றனர்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு வட்டங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட சாகுபடியில் ஏற்பட்ட இழப்பு காரணமாக ஏராளமான விவசாயிகள் 15 ஆண்டுகளாகத் தென்னை சாகுபடிக்கு மாறினர். இவை காய்த்து வருவாய் தந்து கொண்டிருந்த நிலையில் புயல் தென்னையை மட்டுமல்ல தென்னை விவசாயிகளையும் புரட்டிபோட்டுள்ளது.தென்னை விவசாயிகளின் வாழ்க்கை தற்போது 15 ஆண்டுகளுக்கு பின்னுக்கு சென்று விட்டது.தங்களது வாழ்வாதாரமே போய் விட்டதே என்று கண்ணீரில் விட்டு கதறி வருகின்றனர்.



வாட்ஸ் அப்பில் தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளும் அழுகுரலையும் கேட்க முடியவில்லை சாய்ந்த மரங்களி்ல் இருந்த இளநீர்கள் தரையிலும் தண்ணீரிலும் சகதியிலும் கேட்டபாரின்றி விழுந்துகிடக்கிறது யாராவது வந்து மரத்தையும் இளநீர் காய்களையும் இலவசமாக வெட்டி எடுத்துக்கொண்டு போங்கள் எங்களிடம் நிலத்தை சுத்தம் செய்ய காசில்லை ஆகவே வெட்டிய மரத்தையே சன்மானமாகக் கொண்டு மரத்தை எடுத்துக் கொண்டு போங்கள் அத்துடன் இளநீர் காய்களையும் கொண்டு போங்கள் எவ்வளவோ போச்சு இதுவும் போகட்டும் என்கின்றனர் விரக்தியாக.


எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement