Advertisement

தனித்து நிற்க தயக்கம் ஏன்?

'செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், தி.மு.க., தலைவர், ஸ்டாலின்' என்றது, 'டிவி'யில் பெண் குரல்.இரண்டு நாட்களுக்கு முன் ெவளியான, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு குறித்து, செய்தியாளர்களுக்கு, ஸ்டாலின் பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என, மோடி சொன்னது ஆணவத்தின் உச்சக்கட்டம். அவர் அப்படி சொன்னார் என்பதற்காக, 'பா.ஜ., இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என, நாங்கள் சொல்ல மாட்டோம். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், மோடிக்கு, மிகப் பெரிய அடி' என்றார், அவர்.அருகில், அவரது கட்சியை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு புன்னகைத்துக் கொண்டிருந்தார்.தெலுங்கானா சட்டசபை தேர்தலில், தனித்து நின்று, வெற்றிக்கொடி நாட்டிய, டி.ஆர்.எஸ்., கட்சியின் தலைவர், சந்திரசேகர், தி.மு.க., பற்றி சொன்ன கருத்து பற்றி, நிருபர்கள் கேட்டனர்.'அது அவருடைய கருத்து; தி.மு.க., மீது அவர் வைத்து உள்ள நம்பிக்கையை காட்டுகிறது' என்றபடியே நகர்ந்து போய் விட்டார்.அப்படி என்ன சொன்னார், சந்திரசேகர்... 'எங்களைப் போல, தி.மு.க.,வும், தங்களின் முந்தைய வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில், தேர்தல்களில் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும்' என, ஸ்டாலினுக்கு, 'அட்வைஸ்' கூறியிருந்தார்.கோபாலபுரம்சந்திரசேகரின் அறிவுரை, அருமையானது தான்; அதை ஏற்க, ஸ்டாலினிடம் என்ன தயக்கம்?கருணாநிதியின் புதல்வரும், 16 வயதிலேயே, சென்னை, கோபாலபுரத்தில், இளைஞர், தி.மு.க.,வைத் துவக்கி, அரசியல் பழகியவருமான, ஸ்டாலின், நிருபர்களிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்...'ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பற்றி கேட்கிறீர்கள். இது நிச்சயம், 'மினி பார்லிமென்ட்' தேர்தல் அல்ல. காரணம், மாநில ஆட்சிக்கு யார் தேவை என்பதற்கும், மத்தியில் ஆட்சி செய்ய, யார் தேவை என்பதற்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளன.'அதனால் தான், திறம்பட ஆட்சி செய்யாத காங்கிரஸ், மிசோரமில் வீழ்த்தப்பட்டுஇருக்கிறது. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும், பா.ஜ., சரிந்து இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம், இன்னொரு உண்மையும் வெளிப்பட்டுஇருக்கிறது.'மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, தன் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறது; மற்ற மாநிலங்களை வஞ்சிக்கிறது' என, யாரும் இனி சொல்ல முடியாது. அப்படி, பா.ஜ., செய்திருந்தால், ராஜஸ்தானும், சத்தீஸ்கரும், மத்திய பிரதேசமும், கை நழுவி, 'கை' வசம் சென்றிருக்காது!'ஆக... மாநிலங்களுக்கு இடையிலான, தேர்தல் சமயங்களில், தேசியக்கட்சிகள் மோதிக் கொண்டால், அது அந்த கட்சிகளின், மாநில தலைமைக்கு இடையிலான போட்டி தானே தவிர, தேசிய தலைமைக்கு இடையிலான போட்டி அல்ல!'அப்படி கருதினால், தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த, 'மெகா' கூட்டணி, தேசிய அளவில் தோற்றது போல் ஆகி விடும். பார்லிமென்ட் தேர்தலை கருதி, உருவாகி வரும், இன்னும் முழுமை பெறாத இக்கூட்டணியை, இப்போதே கலைப்பது போலவும் ஆகி விடும்.'மக்கள் இன்னும், பா.ஜ.,வை முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதையே, இந்த தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீதம் காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில், காங்கிரசை விட, ஐந்து இடங்கள் குறைவாக பெற்றிருந்தாலும், ஓட்டு சதவீதத்தில், பா.ஜ., முன்னிலை பெற்றிருக்கிறது.'இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், 'மோடி அலை' என்ற ஒன்று, தேசிய அளவில் எழும்பியதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன், முந்தைய லோக்சபா தேர்தலின் போது, சொல்லப்பட்டதற்கு முன்பே, ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும், பா.ஜ., ஆட்சியை கைப்பற்றி இருந்தது.'ஆக... ஐந்து மாநில மக்களில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வை நிராகரித்தவர்களும் உண்டு; ஆதரித்தவர்களும் உண்டு. இதை வைத்து, 'தேசிய அளவில், ராகுல் அலை எழும்பி விட்டது; மோடி அலை, ஓய்ந்து விட்டது' என்பதெல்லாம், ஊடகங்கள் கிளப்பி விடும் கதை!'எந்த அலையும் எழும்பியதாக, எப்போதும் நான் உணர்ந்ததில்லை. அதனால் தான், 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்' என, பேசும் நான், 'ராகுல், பிரதமராக வர வேண்டும்' என, சொல்வதில்லை.'என்னைப் பொறுத்தவரை, உண்மையான வெற்றி என்றால், அது, தெலுங்கானாவில், சந்திரசேகர் பெற்றுள்ள வெற்றி தான்! செயல்படுத்திய நலத்திட்டங்கள், தனக்கு வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில், கூட்டணி இன்றி, தனித்து போட்டியிட்டு, 88 இடங்களில் வென்று, சாதித்துக் காட்டியிருக்கிறார். 'தி.மு.க.,வையும், அப்பாதையில் பயணிக்கச் சொல்லி இருக்கிறார்.'ஆக... இதுவரை, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த போது, தி.மு.க., செயல்படுத்திய நலத் திட்டங்களின் மீதும், அதனால் பலன் பெற்றிருக்கும் தமிழக மக்களின் மீதும், நம்பிக்கை வைத்து, வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., தனித்துப் போட்டியிடும் என, தெரிவித்துக் கொள்கிறேன்.'இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் அனைத்திலும், தி.மு.க., தனித்துப் போட்டியிடும்.'இப்படியொரு துணிச்சலான முடிவை, நான் எடுத்தால் தான், 'தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்; தி.மு.க.,வை அரியணை ஏற்றத் துடிக்கின்றனர்' என, நான் சொல்லி வருவது, மதிப்பு பெறும். இதை உணர்த்திய, தெலுங்கானாவில் மீண்டும் முதல்வராக உள்ள, சந்திரசேகருக்கு நன்றி!'இப்படி, ஸ்டாலின் பேசியிருந்தால், தொண்டர்களை குஷிப்படுத்துவதே குறிக்கோள் என்றிருக்கும், சில கட்சித் தலைவர்களுக்கு மத்தியில், ஒரு தலைவர் உருவாகி விட்டார் என்ற நம்பிக்கை, மக்களுக்கு கிடைத்திருக்கும்.'பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, கருணாநிதியின் வலிவு எனும் மூன்று ஆயுதங்கள், எனக்கு துணையாக இருக்கின்றன' என, சொல் லும் ஸ்டாலின் கவனத்திற்கு...ஜெயலலிதா இல்லை என்றான பின், தனித்து நிற்க உங்களுக்கு என்ன தயக்கம்?காங்., கூட்டணிகாங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை, தேர்தல் நெருங்கும் வரை அவர்களோடு கூட்டணியில் இருந்த, தி.மு.க.,வின், 'நேர்மையை' தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனும் அச்சம் தடுக்கிறதா?இல்லை... பத்து ஆள் சேர்ந்து எதிர்க்கும் போதும், ஒத்தை ஆளாக நிற்கும், மோடியின் பிம்பம் மிரட்டுகிறதா?'தனித்து நின்று, தி.மு.க., தெறிக்க விடும்' என, நீங்கள் அறிவித்திருந்தால், தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவே, உங்களை திரும்பி பார்த்திருக்கும். சந்திரசேகர் சுட்டிக் காட்டிய பிறகும், உங்களுக்கு தயக்கம் ஏன்?- வாஞ்சிநாதன்vanjinath40@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement