Advertisement

மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்

இதுவும் கொடுப்பர், இன்னமும் கொடு்ப்பர்

மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்


தேவைக்கு மேல் இருப்பதை கொடுப்து தர்மம் அல்ல தேவைகளை குறைத்துக் கொண்டு கொடுப்பதே எங்கள் தர்மம் என்று இன்றும் டவுன் பஸ்சில் பயணிக்கும் மூத்த தம்பதியினர் தங்களது கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை தர்ம காரியத்திற்கு கொடுத்துள்ளனர் இன்னமும் கொடுத்து வருகின்றனர்

மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன்-ஜலஜாவாகும்.மத்திய அரசு ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர்.

ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர்.அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும்.அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர்.ஜனார்தனனுக்கு திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தை கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.

அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளீட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற அமைப்பினை துவங்கி ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களை காப்பாற்றி தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர்.ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர் இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாக கொடுத்தனர்.

ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர் , இடத்தை பதிவு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்கு காரணம்.இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தை தானமாக கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்தனர்.

இடம் கிடைத்துவிட்டது இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது, இரண்டு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது.

கட்டிடம் கட்டியாகிவிட்டது நோயாளிகள் படுக்க படுக்கை வேண்டுமே என்ற சூழ்நிலையில் கொஞ்சமும் தயங்காமல் ஐம்பது கட்டில்கள் வாங்கி கொடுத்தனர்.இதை எல்லாம் நிர்வாகம் செய்ய இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும் என்ற போது இந்தாருங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதையும் வாங்கிக் கொடுத்தனர்.

இப்படி இதுவும் கொடுப்பான் இன்னமும் கொடுப்பான் என்ற கர்ணனைப் போல தர்ம காரியத்திற்கு கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்த தம்பதியினர் பெரிய பணக்காரர்கள் அல்ல மத்திய அரசு வழங்கும் பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள்தான் எங்காவது போகவேண்டும் என்றால் கால் டாக்சியில் போனால் கூட காசு செலவாகும் என்று நினைத்து டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.

வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது தங்களது வேலைகளை தாங்களேதான் செய்து கொள்கின்றனர் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவை பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர் பிறகு நேரம் கிடைக்கும் போது ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு விசிட் செய்து அங்குள்ளவர்களிடம் அன்பாக பேசி ஆறுதலளித்துவிட்டு வருகின்றனர்.தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரிடம் பேசினாலும் தர்மம் செய்யச் சொல்லி வலியுறுத்தி அந்த தர்மத்தை ஐஸ்வர்யம் அறக்கட்டளை உள்ளீட்ட தொண்டு நிறுவனங்கள் பெறச் செய்கின்றனர்.

இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில் மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 39 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்துவருகின்றனர்.

அவர்கள் மட்டுமல்ல நீங்களும் நிம்மதியாக வாழ்க்கைகை கடக்கவேண்டும் என்றால் தர்மம் செய்வதை சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் வீட்டில் உள்ள சிறு வயது குழந்தைகளையும் தர்மம் செய்யவைத்து பழக்குங்கள்,தேவைக்கு மேல் அல்ல தேவைகளை கூட குறைத்துக்கொண்டு கொடுத்து பாருங்கள் அதன் சுகமே தனி என்று சொல்லும் இந்த தம்பதியை வாழ்த்த விரும்புபவர்களுக்கான எண்:0452-248410099 (எழுபத்தைந்து வயதை தாண்டிய தம்பதியர் ஆகவே போனை எடுக்க தாமதமாகலாம் எடுக்காலும் போகலாம் கவனத்தில் கொள்ளவும்)

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (32)

 • bal - chennai,இந்தியா

  இந்த ஐந்து ருபாய் டாக்டர் இறந்தவுடன் சுடலை போய் பார்த்தது...அது மாதிரி இந்த கும்பல் இந்த தம்பதியிடம் பிடுங்காமல் இருந்தால் சரி.

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  இந்த தம்பதிகளை நினைத்து பெருமை கொள்கின்றேன்...அதே நேரத்தில் அந்த மருத்துவ குழுவினரின் நரி சூல்ச்சியை என்னி வருத்தம் கொள்கின்றேன்...இதில் பாவம் ஏதாவது மருத்துவ குழுவினர் செய்தால் நிச்சயம் அவர்களின் இறுதி காலம் கவலைக்கிடமாகிவிடும்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  திரு முருகராஜ் அவர்களே, இதே மதுரையில் இதே சமூகத்தை சார்ந்த மறைந்த திரு. என் எம் ஆர் சுப்பராமன் அவர்களும் அனைத்தையும் அள்ளிக்கொடுத்தவர்

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வணங்குகிறேன் அவர்களை.

 • Ram Sekar - mumbai ,இந்தியா

  "ஜெகன்" அவர்களே அது என்ன "'அவா' எப்பவுமே சூப்பர் தான்…" என்று?? சாதியை பார்த்து சொல்ல வேண்டாம். மற்ற சாதிகளிலும் நல்லோர் உள்ளனர்.

 • skv - Bangalore,இந்தியா

  நல்லமனம் வாழ்க என்று வாழ்த்துகிறேன் பலருக்கும் தமது பழைய பண்டங்களைக் கூட தர மனமே இல்லாது வாழுற இக்காலகத்துலே மெய்யாலும் இவர்கள் கிரேட் தான் அவருக்கு கண்பார்வை கிடைக்கணும் என்று இறைவனை வேண்டுகிறேன் . நாம் பூமிலேபிறக்கும் பொதுஒண்ணும் கொண்டுவராலேயே போறச்ச என்னகொண்டுபோறோம் ஏழையோ பணக்காரனோ பெரிய பதவியே இருந்து நாட்டையே கொள்ளை அடிச்சு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல்வியாதிகள் வெறும் வெங்கடேசா என்றுவந்தவனெல்லாம் இருக்கோடீலே பொரளுகிறான் கட்சியே இருக்கும் அடிமட்ட தொண்டன் அடுத்தவேளை சோத்துக்கும் வழியே இல்லாது இருக்கான் என்பதும் உண்மை எல்லோருக்கும் இவா போல நல்லமனம் வராதுங்க அதுதான் உண்மை பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்யணும் இந்த தம்பதி

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இங்கே அசிங்கம் எதுவென்றால் ஏதோ மருத்துவர்கள் அறக்கட்டளை நடத்துகிறார்களாம் அதற்க்கு இடம் இல்லையென்று ஒரு மூத்த நல்மனம் கொண்ட (தமிழகம் இதுவரை பார்த்திராத ) தம்பதியர் முன் வந்த போது அந்த தானம் பற்ற இடத்தை பதிவு செய்ய இரண்டரை லக்ஷ ரூபாய் அந்த மருத்துவ குழுவினரிடையே இல்லையாம்(?) அதற்கும் இந்த தம்பதியரே உதவியுள்ளாராம் .இந்த வெட்க கேட்டை யாரிடம் பொய் சொல்ல? அந்த மருத்துவர் குழு இந்த பணத்தை நினைத்திருந்தால் வேறே எங்கேயேனும் பெற்றிக்க முடியாதா அல்லது தங்களது சேமிப்பினால் (?) கொடுக்க முடியாதா? சங்கம் வளர்த்த Madurai ஒரு பக்கம் வள்ளல் தம்பதியினரையும் மறு பக்கம் இந்த மாதிரி மனிதர்களையும் படைத்துள்ளது.

 • Dalda - Varanasi,இந்தியா

  ஈசன் அந்த அருளாளர் ஜனார்த்தனன் அய்யாவின் கண் குறைபாட்டை நீக்கி அருள் செய்ய பிரார்த்திக்கிறேன்

 • jagan - Chennai,இந்தியா

  'அவா' எப்பவுமே சூப்பர் தான்...கொஞ்சமாவது மழை பெய்ய உதவுகிறார்கள்

 • kalyanasundaram - ottawa,கனடா

  GOD BLESS THESE COUPLES. BUT IT IS QUITE STRANGE HOW POLITICIAN OF THAT ARE FAILED TO CLAIM CREDIT FOR THESE COUPLES BENEVOLENCE. ITS BLESSING IN DISGUISE POLITICIANS ARE KEPT AT A VERY FAR OFF DISTANCE. AT LEAST NOW GOVERNMENT ARRANGE TO REFUND THE BRIBES COLLECTED . IT IS DEFINITE FAMILIES OF THOSE WHO COLLECTED BRIBES FOR THIS PHILANTHROPIC ACTIVITIES WILL BE PUNISHED BY THE ALMIGHTY IF HE REALLY EXISTS

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement