Advertisement

வீர வணக்கம் செலுத்துகின்றோம்...

nsimg2214269nsimg
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது, 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

nsmimg672380nsmimg

இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நம்முடைய வீர வணக்கங்கள் அவர்களுடைய குடும்பத்திற்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

nsmimg672383nsmimg

காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான பயங்கரவாதிகளின் பத்தாவது தாக்குதல் இது.முந்தைய முக்கிய தாக்குதல்கள்

1999 நவ., 3: ஸ்ரீநகர் பதாமி பாஹ் பகுதியில் ராணுவத்தினர் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் 10 வீரர்கள் பலி. 2002 மே 14: கலுஷாக் ராணுவ கன்டோன்மென்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலி, இதில் பெரும்பாலானவர்கள் வீரர்களின் குடும்பத்தினர். 2003 ஜூலை 22: ஜம்முவில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் 8 வீரர்கள் பலி. 2006 அக்., 5: ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் 3 போலீசார், 2 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி. 2013 மார்ச் 31: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப்., முகாம் மீதான தாக்குதலில் 5 வீரர்கள் பலி.2013 ஜூன் 24: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 வீரர்கள் பலி. 2016 செப்., 18: உரி பகுதியில் ராணுவ முகாம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலில் 19 வீரர்கள் பலி. 2016 ஜூன் 25: ஸ்ரீநகரில் ராணுவ வாகனம் மீது நடந்த தாக்குதலில் 8 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி. 2016 நவ., 29: ஜம்முவில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் 7 வீரர்கள் பலி.2019 பிப்., 14: புல்வாமா பகுதியில் ராணுவ வாகனம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இப்போது 44 வீரர்கள் பலி.

நாட்டிலேயே தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றுவது ராணுவ வீரர்களே. தங்களுக்கு சாவு எந்த நேரத்திலும் வரும் என்று தெரிந்தவர்கள், தேடி சென்று தங்கள் இன்னுயிரை கொடுத்து பயங்கரவாதிகளை தண்டிப்பவர்கள். ராணுவ வீரன் தனது உயிரை கொடுத்து மக்களை காப்பவன். அப்படிப்பட்ட வீரர்களை நாம் பெற்று இருப்பது மன நிறைவு. ஆனால், அநியாயமாக அவர்கள் இனிமேலும் மரணம் அடையக்கூடாது. பொறுத்தது போதும், பொங்கி எழுந்து பதிலுக்கு தாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

உயிர் தியாகம் செய்த நம் நாட்டு வீரர்களின் அர்பணிப்பு விலை மதிப்பற்றது. அவர்களின் தியாகம் வீண்போக கூடாது. நாம் கொடுக்க போகும் பதிலடியில் எதிரிகள் நம்மை சீண்டி பார்க்க இனிமேல் கனவிலும் கூட நினைக்க கூடாது.

இந்தியாவை நேரடியாக தாக்கினால் எப்போதும் தோல்விதான் என்பதை புரிந்துகொண்ட பாக். இது போன்ற செயல்களில் ஈனர்களை ஈடுபடவைத்து இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கொள்கிறது.

பாக். துணை இல்லாமல் இதுபோன்ற தாக்குதலை நடத்தமுடியாது என்பதுதான் உண்மை.40 ஆண்டுகாலமாக இதுபோன்ற செயலை செய்துவிட்டு கண்டனத்தையும் தெரிவித்து நாடகமாடுவது அதற்கு கைவந்த கலை, இதை இனி நாம் நம்பவேண்டாம் .


இது ஒரு கோழைத்தனம்,நம் வீரர்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியமில்லாத பேடிகளின் செயல் , அயற்சியிலா உன் முயற்சியை காட்டுவது, கதறுகிறாள் எம் பாரதத்தாய் தம் மாந்தர்கள் மாண்டுகிடப்பதை பார்த்து அவளின் கண்ணீர் துடைக்கவும் கயவர்களை வேரறுக்கவும் எம் வீரர்கள் களமிறங்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வெளியிலிருந்து தங்கள் உள்ளே வர முடியாத நிலையில், உள்ளிருப்போரை மனதில் விஷம் ஏற்றி, செயல்படுத்துகிறார்கள் . இதற்கு முதலில் முற்று புள்ளி வைக்கவேண்டும். நம்மை கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார்கள். நம் பொறுமையை அவர்கள் பலவீனமாக நினைக்கிறார்கள். பொறுமையும் ஒரு நாள் சுனாமி போல் பொங்கி எழும் என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டியது கட்டாயம்.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். இனியும் ஒரு வீரனின் உயிர் போனால் கூட பொறுக்காது இந்திய இனம் என்பதை அமைச்சர் புரிந்துகொள்ளவேண்டும்.

ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.புல்வாமா தாக்குதலுக்காக எதிரிகள் மிகப் பெரிய விலையை கொடுப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


நீங்கள் எடுக்கப்போகும் முடிவில்தான்,நமது ராணுவம் கொடுக்கப்போகும் பதிலடியில்தான் கொதித்துப் போயிருக்கும் ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் அடங்கும், அமைதிபெறும்.

ஜெய்ஹிந்த்
-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • K.P SARATHI - chennai,இந்தியா

    தேசத்தின் ஒற்றுமை என்ற எண்ணம் வரும்போது அனைத்து கட்சிகளும் , மதங்களும் ஒன்று சேரவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement