Advertisement

எனக்கு ஒரு டீ சேர்த்து சொல்லு...

அலகபாத் கும்பமேளாவில் நிறைந்திருக்கும் சாமியார்களால் பல சுவராசியமான அனுபவங்கள் ஏற்பட்டது அதில் ஒன்று அவர்கள் உரிமையுடன் யாரையும் அணுகுவது.

இங்கே உள்ள டீக்கடைகள் போன்ற திறந்த வெளி டீக்கடைகள் அங்கும் நிறையவே இருந்தது அந்த கடைகளில் ஒன்றி்ல் டீ வாங்கிச் சாப்பிட நின்று கொண்டு இருந்த போது ஒரு சாமியார் அங்கே வந்தார்.

எனக்கும் சேர்த்து டீ சொல்லு என்றார் உரிமையுடன்

நம்மூரில் வழக்கமாக கடையை விட்டு தள்ளி நிற்பர்,டீ சாப்பிடுவோர் சாப்பிட்டுவிட்டு போகும் போது மிக பவ்யமாக வணக்கம் போட்டு காசு கேட்பர், கொடுத்ததை வாங்கிக் கொண்டு நன்றி வணக்கம் போடுவர். இப்படிப்பட்ட காவி உடைக்காரர்களை பார்த்து பழகிய எனக்கு இந்த சாமியாரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது.

எனக்கு தெரியாத இந்தி மொழியில்தான் அவர் அப்படி கேட்டார், மொழி தெரியாவிட்டாலும் அவர் கேட்ட தோரணையே அவர் என்ன கேட்கிறார் என்பது புரிந்தது.

சரி அவருக்கும் சேர்த்து டீ சொல்வோம் என்று கடைக்காரரிடம் திரும்பி சொல்வதற்குள் அவர் ஏற்கனவே இரண்டு டீ போட்டிருந்தார் எடுத்து சாமியாரிடம் முதலில் கொடுத்துவிட்டு அடுத்துதான் எனக்கு கொடுத்தார்.

ஏதோ எனக்கு டீ வாங்கிக் கொடுத்தது போல சாமியார் டீயை குடித்தபடியே என்னை ஒரு ஒரப்பார்வை பார்த்தார் பதிலுக்கு நானும் அவரது கண்களை பார்க்க நினைத்தேன் ஆனால் பெரிய நாமம் மறைத்தது, எனக்கு நீ டீ வாங்கி்க் கொடுத்ததன் மூலம் எவ்வளவு புண்ணியம் பெற்றிருக்கிறாய் தெரியுமா? என்பது போல ஒரு ஏகாந்த பார்வை பார்த்தார்,நான் அமைதி காத்தேன்.

எல்லாம் முடித்து புறப்பட போனவரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்றேன் ஆகாயத்தை பார்த்தபடி சிறிது நேரம் யோசித்தவர் பிறகு சம்மதித்தார் ஆனால் படம் எடுப்பதற்கு முன் செருப்பைக் கழட்டிவிடு என்றார் செய்தேன் இப்படி அவர் போட்ட சில பல கண்டீசன்களுக்கு பிறகு அவரை படம் எடுத்தேன்

அதன் பிறகு அவர் சிறிது நேரம் என்னிடம் ஏதோ சொன்னார் அநேகமாக நுாறு ரூபாய் கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள் என்பது போல இருந்தது, மொழி தெரியாததால் ஏற்பட்ட ஒரே நன்மை இதுதான்,‛ நீங்கள் கேட்பது புரியவில்லை என்று சைகையால் சொல்லிவிட்டு அகன்றேன்.

ஏற்கனவே இங்கு வந்திருந்த புகைப்பட நண்பர் ஸ்கந்தகிருஷ்ணன் எனக்கு அறிவுரை கொடுத்திருந்தார், நிர்வாண சாமியார்களை படம் எடுக்கும் போது என்னிடமும் கேமிரா இருக்கிறது என்று பொசுக் என எடுத்துவிடாதீர்கள் கையால் அல்ல கம்பால் சட்டென அடித்துவிடுவர் ஆகவே ஓரு பத்து ரூபாய்க்கு குறையாமல் அவர்கள் காலடியில் போட்டுவிட்டு பவ்யமாக அவர்களிடம் திருநீர் வாங்கி பூசிக்கொண்டு பிறகு கேமிராவை காட்டுங்கள் பெரும்பாலும் அனுமதிப்பார்கள் அப்புறம் படம் எடுங்கள், அனுமதிக்காவிட்டால் விட்டுவிடுங்கள் காரணம் அவ்வளவு கடுமையானவர்கள் என்றார்.

அவர் கூறியபடி பை நிறைய பத்து ரூபாயுடன்தான் அங்கு இருந்தேன் அவர் சொன்னபடி நடந்தேன் ஆனால் நான் போயிருந்த போது அவர்களது அந்தஸ்து உயர்ந்து இருந்தது பத்து ரூபாயை ஏதோ ஒரு கரப்பான் பூச்சியை பார்ப்பது போல பார்த்தனர் அப்புறம் கூடுதலாக சில பத்து ரூபாய்கள் போட்டபிறகே வேலை நடந்தது.

பொதுவாக வட மாநிலத்தவர்கள் சாமியார்களுக்கு நிறைய பணம் கொடுத்து பழக்கிவைத்திருக்கின்றனர் அவர்கள் சொல்வதை குடும்பத்துடன் காலடியில் உட்கார்ந்து காது கொடுத்து கேட்கின்றனர் இதனால் பெரும்பாலான சாமியார்கள் பணம் பண்ணிக்கொண்டுதான் இருந்தனர் முதல் துறவு பணத்திடம் இருந்துதான் என்பதை யார் இவர்களுக்கு கற்றுக்கொடுப்பது.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஓரளவு அல்லது அநேக விஷயங்களை துறந்தவர்கள் இவர்கள்.இவர்களை பார்த்து குடும்பஸ்தர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த' துறை 'உணர்வே.ஆனால் ஆண்டவன் படைப்பில் இவர்களுக்கும் பசி என்று ஒன்று உண்டே ?அதற்க்கு நாம் கொடுக்கும் ஒரு சில காசுகள் ஒரு பொருட்டே இல்லை.இதை கொடுத்து விட்டு நாம் ஏதோ நமது சொத்தையே எழுதிக்கொடுத்த மாதிரி புலம்புவது அறிவுக்குறைவு மற்றும் மானக்கேடு தான்.தெற்க்கேயிருந்து மாதங்களுக்கு முன்னரே குளிர் sadhana பெட்டி வசதி ,கால் டாக்ஸி சகிதம் பயணித்து வரும் வழியில் கிடைத்ததை எல்லாம் (போட .பஜ்ஜி.சமோசா டீ ) நொறுக்கிக்கொண்டு பயணம் செய்தொர் இந்த அறிவைக்கூட பயண முடிவில் பெற வில்லை என்பது தவிர அந்த வகை சாமியார்களுக்கு 'துறவு' பற்றியும் சொல்லிக்கொடுப்பது அறிவீனத்தின் உச்ச கட்டமே.இடது கை கொடுப்பது வலது கைக்குக்கூட தெரியாக்கூடாது என்ற தத்துவமே உள்ளது?ம் ,ஆன்மிக பயணங்கள் செய்வது 'பிகினிக்' அல்ல .நாம் கொஞ்சமேனும் திருந்துவதே நோக்கம்.அதி தவர் விட்டவன் எவ்வளவு சுற்றினாலும் எதையும் அறியாத கிணற்று தவளையே

  • TechT - Bangalore,இந்தியா

    good article, googly article :)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement