Advertisement

மிருகங்களிடம் இரக்கம் காட்டாதீர் சிந்தனைக்களம்

'அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா... நீங்க சொல்றதெல்லாம் செய்யறேண்ணா...' என, இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் அவலக்குரல் தான், இன்று எல்லார் மொபைலிலும் ஈன ஸ்வரமாக ஒலிக்கிறது; கேட்பவர் நெஞ்சில் இடியாய் விழுகிறது.


பெண்ணைப் பெற்றவர்கள் நெஞ்சு பதைபதைக்கிறது. 'யார் வீட்டுப் பெண்ணோ, கொடியவர் களிடம் இப்படி சிக்கிக் கொண்டாளே...' என்ற உணர்வில் மனம் அழுகிறது.ஆனால், இது தொடர்பாக வரும் அறிக்கைகளும், பேட்டிகளும், பேச்சு களும் சம்பவத்தை திசை திருப்பி விடுமோ என, சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது.


பெண்களை மிரட்டி, பணிய வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, 'வீடியோ' எடுத்த பொள்ளாச்சி கொடூரத்தால், நாட்டு மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.இது, பொள்ளாச்சியில் உள்ள, வேலை வெட்டியில்லாத பணக்கார பசங்களின் கொடூரம்; இருபதிற்கும் மேற்பட்ட முறை, குழுக்களாக நடத்திய பல ஆண்டு லீலை. 'பேஸ்புக்' எனப்படும், முகநுால் மூலம், பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டி சீரழிப்பதே இவர்களது தொழில்.


இவர்களது வலையில் விழுந்த பெண்களில், பள்ளி, கல்லுாரி மாணவியர் முதல் திருமணமானவர்கள், வசதியானவர்கள் என, பலரும் உண்டு. கார், பண்ணை வீடு, ஆடம்பர உடை, ஆசை வார்த்தை போன்றவைகளால், பெண்களை தங்கள் வலையில் விழ வைக்க வேண்டியது, இவர்கள் நோக்கம்.


கடும் தண்டனைபின், நண்பர்களோடு சேர்ந்து, கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்வது. அதை வீடியோ எடுத்து, தங்கள் உடல் மற்றும் பணப்பசிக்கு அவ்வப்போது இரையாக்கிக் கொள்வது... இதில் இருந்து எப்படியோ தப்பிய ஒரு இளம்பெண்ணின் கதறல் தான், நடந்த அவலங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்துள்ளது; அனைவரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. நடந்த கொடூரத்தை முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.


அரசியல் அழுத்தத்திற்கு அப்பாற்பட்டு, இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.நடந்த கொடூரங்களுக்கும், உள்ளூர் அரசியல் பிரமுகருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, தகவல் பரப்பப்படுகிறது. போலீஸ் கையில் உள்ள குற்றவாளிகளை, 'முறைப்படி' விசாரித்திருந்தாலே இந்நேரம் எல்லா உண்மைகளும் வெளி வந்திருக்கும்.


'பாதிக்கப்பட்ட பெண்கள், தைரியமாக, போலீசிடம் தகவல் சொல்லலாம்; ரகசியம் பாதுகாக்கப் படும்' என்கிறது போலீஸ். ஆனால், பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த ஒரு பெண்ணின் பெயர், ஊர் போன்ற விபரங்களை தெரிவித்து, பத்திரிகை குறிப்பே அனுப்புகின்றனர்.பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், கடந்த ஆண்டில் மட்டும் காதல் தோல்வி, வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்ட, ஏழுக்கும் மேற்பட்ட பெண்களின் வழக்குகளை துாசு தட்டி எடுங்கள்; இந்த கொடூரன்களில் நிழல் அதில் நிச்சயம் படிந்திருக்கலாம்.நடவடிக்கை வேண்டும்


ஒட்டுமொத்த தமிழகத்திலும், பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தாயும், தந்தையும், குடும்பங்களும் உறைந்து கிடக்கின்றன. இந்த கடைந்தெடுத்த அயோக்கிய கழிசடைகளுக்கு, காமப்பிசாசுகளுக்கு, மனித மிருகங்களுக்கு, கொஞ்சமும் இரக்கம் காட்டாதீர்.அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர காவல் துறை உறுதியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது போன்றதொரு கொடுமை, சில காலத்திற்கு முன், கோவையில் நடந்தபோது, அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த, சைலேந்திரபாபு எடுத்த கடுமையான நடவடிக்கையால், அவரது படத்தை ஊரெல்லாம், 'கட் - அவுட்' வைத்து, மக்கள் கொண்டாடினர்.போலீஸ் அதிகாரிகளே... பொள்ளாச்சி மக்கள் மட்டுமின்றி, தமிழக மக்கள் உங்களையும் மதிக்க வேண்டும் என்றால், உங்களுக்குள் இருக்கும், 'சைலேந்திரபாபு'வை உசுப்பிவிடுங்கள்.


அதுபோல, பெண்களே... 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்காதீர்கள். அது ஒரு, மாயவலை; சிக்கினால் சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை. பொள்ளாச்சி கொடூரத்திற்கு பிரதான காரணமே, பேஸ்புக் தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்; அந்த பக்கமே, தலை வைத்து படுக்காதீர்கள்.


- எல். முருகராஜ்


பத்திரிகையாளர்

தொடர்புக்கு:இ- - மெயில்:murugaraj@dinamalar.inமொபைல் எண்: 9944309637

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Amuthe Thamile - New Jersey,யூ.எஸ்.ஏ

    . எந்த குறிப்பிட்ட ஆண் சமூகம் தைரியமாக இந்த கற்பழிப்புகளை காலம் காலமாக செய்துவருகிறார்கள் என்பதை ஆராயவேண்டும் ￰அப்போதுதான் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என புரியும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது காலம் காலமாக நடந்து வரும் மிக பெரிய கொடுமை, பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் முதல் கட்டம் " பெண் பாலியல் வன்கொடுமை" , அதன் உச்சம்தான் "கற்பழிப்பு". எத்தனையோ 1000 ஆண்டுகாலக இந்த துயரம் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டுதான் வந்துள்ளது,

  • Rajendran - Kumbakonam - Kumbakonam,இந்தியா

    அடித்து சொல்கிறேன் ..... பொள்ளாச்சியை தாக்கியது பாலியியல் வன்கொடுமை என்ற சமூக வியாதி ... ஒளிர வேண்டிய இளைஞர்கள் நோயின் தாக்கத்தில் கைது.... ஆம். பொள்ளாச்சி இளைஞர்கள். ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக இந்த அப்பாவி பொள்ளாச்சி ஆண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சமூக கிருமிகளால் மெல்ல, மெல்ல கண்ணி வைக்கப்பட்டு ஆம். பொள்ளாச்சி கன்னிகளின் கண்ணியம் சிதைக்கப்படும் சூழலுக்கு நோய் முற்றி விட்டது. இது பொள்ளாச்சி கன்னிகளின் வரலாற்றில் ஒரு தீர்க்க முடியாத களங்கம் குற்றம் செய்தால் தண்டிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது நம் கோபத்தை தீர்த்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். குற்றம் செய்தவரின் குற்றத்திற்கு full stop வைக்க மறுக்கிறோம். அவர் வாழவேண்டிய நிம்மதி தூண்டலுக்கு full stop வைக்கிறோம். அல்லது தூக்கு தண்டனை என்று full stop வைக்கிறோம். பரிட்சையில் fail என்று full stop வைக்காமல். 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி என்று result வரலாமே. ஜஸ்ட் pass ஆனாலும் பரவாயில்லை. கொஞ்சம் நல்லவன். அது போதுமே பிறப்பின் பயன் அடைந்ததாகுமே பொள்ளாச்சி சம்பவ வன் கொடுமைக்கு கொதித்து எழும் மக்கள். பூமி தாய், தனக்கு நிகழும் இயற்க்கை தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அளவிற்கு செய்யும் வன் கொடுமைக்கு ஏன் மக்கள் கொதித்து எழவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு மனித உயிர் இனம் தான். பாதிப்பை செய்த ஆணும் ஒரு மனித உயிர் இனம் தான். ஆண்களுக்கு உடலில் வலிமை அதிகமாம். பெண்களுக்கு மனதில் வலிமை அதிகமாம். ஆம். பெண்களை அந்த பொள்ளாச்சி ஆண்கள் பாலியலை மையமாக வைத்து தண்டித்துவிட்டனர் உடல் அளவில். அந்த பாதிப்பை செய்த ஆண்களை மனதை தண்டிக்கலாமே குற்றம் நீங்கிய புத்துணர்வாக வருமுன் காப்போம் என்பது போல் இன்னும் நான்கு ஆண்களை தங்களை போன்ற குற்ற செயலில் ஈடு படாவண்ணம் திருத்தும் மனித நேய ஆண்களாக அவர்களை கொண்டு வர அரசு ஏன் முயலவில்லை. இது தானே நீதி. அன்று அறவழியில் காந்தியும் மற்றோரும் தங்களை வருத்திக்கொண்ட போது ஆங்கிலேய அரசு சுதந்திரம் தானே கொடுத்தது மேலும் வலியை ஆங்கிலேய அரசு அறவழியில் ஈடுபட்டோருக்கு கொடுத்திருந்தால் அது வெற்றியாக நீதிக்கு அமையாது. நீதி என்பது வலி அல்ல தலையாய அன்பின் வழி. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது தன் இழப்பை போல் கண்ணையோ பல்லையோ எடுக்கும் இறுதி செயல் அல்ல . நம் குற்றத்தால் கண் இழந்தால் கண் தானம் நாம் செய்ய வேண்டும். நம் குற்றத்தால் பல்லை உடைத்தால் செட்டு பல் கொடுத்தோ நாம் மென்று கொடுத்து அவரின் பசியை ஆற்றி பல் செய்யவேண்டிய செயலை செய்வோமே. வன்முறைக்கு வன்முறை தீர்வு ஆகாது. அந்த பெண்களுக்கு நடந்த கொடுமைக்காக பொள்ளாச்சி ஆண்களை தண்டிக்கத்தான் வேண்டும் என்றால் மயக்க (மறப்பு) ஊசி போட்டு அடியுங்கள் உங்கள் மனதின் கொடூரமும் கெட்ட நிம்மதி அடைவதற்காகா. அல்லது அந்த பொள்ளாச்சி ஆண்களுக்கு போதிய வலியை தாங்க கூடிய பயிற்சி அளித்து தண்டியுங்கள் ஆனால் வெற்றி அது அல்ல நல்லவன் என்ற ப்ரோமோஷன் தான். அதற்கான விலை தண்டனை அல்ல எளிதான இலவசமான நெம்பு கோல்தான் தூக்கி நிறுத்தும் மனிதத்தை. குறை இல்லாத மனிதன் எவனும் இல்லை, கற்றது கையளவு கல்லாதது உலக அளவு. ஆம். உலக அளவில் அனைவரும் முட்டாள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பொள்ளாச்சி நிலை. இது அனைவரின் பொல்லாத நிலையை காட்டுகிறது. அந்த கஜ புயல். ஆம். பொள்ளாச்சியை போல மனித ஆணும் பெண்ணும் பூமியை அதன் இயற்கை தன்மையை வன் கொடுமை செய்திருக்கிறீர்கள் என்பதுதான் அந்த பிரதிபலிப்பு ஆகும். சாந்தி நிலவ வேண்டும். பூமி தனக்கு நேரும் வன் கொடுமையை எப்படி காட்டும்.

  • Govindarajan Thilagavathi - singapore,சிங்கப்பூர்

    இந்த காமப்பிசாசுகளுக்கு மற்றவர்கள் இனி கனவிலும் தீங்கு நினக்காவண்ணம் கொடூர தண்டனை தர வேண்டும். டாஸ்மாக்க்கில் கல்லா கட்டுவதையே முக்கிய பணியாக செய்யும் அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனைத்து காவலர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீட்டிலும் கூட பெண் பிள்ளைகள் வளர்க்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement