Advertisement

தமிழர்களுக்காக...


அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.

மிகக்குறைந்த கட்டணத்தில் இங்கே தங்கிக் கொள்ளலாம் மூன்று வேளையும் தமிழ்நாட்டு உணவு சாப்பிடலாம்

இதற்கு ஒரே ஒரு தகுதிதான் இருக்கவேண்டும் அந்தத் தகுதி தமிழர்களாக இருக்கவேண்டும் என்பதுதான்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்றழைக்கப்படும் வணிக சமூகத்தினர் ஆன்மீகத்திற்கு செய்துவரும் பணி மகத்தானதாகும்.

அப்படிப்பட்ட பணிகளில் ஒன்றாக வட மாநிலங்களுக்கு யாத்திரை செல்லும் தமிழர்கள் மொழி தெரியாத தேசத்தில் உணவிற்கும் தங்குவதற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல சத்திரங்களை கட்டிவைத்துள்ளனர்.

காசி,அலகபாத்,அயோத்தி,கயா ஆகிய இடங்களில் கட்டி வைத்துள்ள சத்திரங்கள் அதில் முக்கியமானவை.காசியி்ல் உள்ள சத்திரத்தில் இடம் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து பெரும்பாலோர் அங்கு செல்கின்றனர் காரணம் அந்த அளவிற்கு அங்கு சேவை வழங்கப்படுகிறது.

அலகபாத் சத்திரத்திலும் அப்படியே அங்கு கும்பமேளா நடந்த சமயத்தில் தமிழர்கள் பலர் சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் சிரமமில்லாமல் இருந்தனர் என்றால் அதற்கு இந்த சத்திரம்தான் காரணம்.

தலைமைச் சங்கத்தில் இருந்து நியமிக்கப்பட்ட நாகப்பன்-சாரதா ஆகிய வயதான தம்பதியினர்தான் இந்த சத்திரத்தின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் இங்கு வந்து பல வருடங்களாகிவிட்டபடியால் இந்தியும் நன்கு பேசுகின்றனர்.இதன் காரணமாக உள்ளூர் மக்களையும் வாகன ஒட்டிகளையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இது இங்கு செல்லக்கூடிய தமிழர்கள் திரிவேணி சங்கமத்தில் குளிக்க, பூஜை செய்ய, உள்ளுரை சுற்றிப்பார்க்க சரியாக ஆட்களை கொடுத்து வழிகாட்டுகின்றனர்.

இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து சப்பாத்தி சாப்பிட்டு நொந்து வந்தவர்கள் இ்ங்கு சுடச்சுட சாதம் சாம்பார் ரசம் காய்கறி இட்லி வடை கிடைத்ததும் ஒரு கட்டு கட்டுகிறார்கள்,தங்கியிருக்கும் நாட்களில் சாப்பாடு போடுவது மட்டுமின்றி ஊர் திரும்பும் போது ரயில் பயணத்தில் தேவைப்படக்கூடிய சாப்பாட்டையும் பார்சலாக கொடுக்கின்றனர்.

அலகபாத் ரயில் நிலையத்தில் இறங்கி ‛நாட்கோட் சத்தர்' என்றால் போதும் ஆட்டோக்காரர்கள் கொண்டுபோய் இறக்கிவிடுவர் அவ்வளவுதுாரத்திற்கு சத்திரம் பிரபலம்.

இந்த விடுமுறைக்கு அலகபாத் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சத்திரத்தி்ல் தங்கி செல்வது உங்கள் பர்ஸ்க்கும் உடம்புக்கு நல்லது.அலகபாத் நாட்டுக்கோட்டை நகர சத்திரத்திற்கான போன் எண்:0532-2501275.வயதானவர் என்பதால் மெதுவாகத்தான் பேசுவார், போனை எடுக்காவிட்டால் வந்தவர்களுக்கு உதவ வெளியில் போயிருக்கிறார் என்று அர்த்தம்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement