Advertisement

மனிதராய் பார்த்துவிட்டோம் விரைவில் புனிதராய் பார்ப்போம்

nsimg2242695nsimg

நேற்று இறந்த வரையே இன்று மறந்துவிடும் இன்றைய வேகமான உலகில் 46 வருடங்களுக்கு முன் இறந்த ஒரு வெளிநாட்டு பாதிரியாரை போற்றி அவரது நினைவு நாளில் சாதி மதம் பாராது ஊரே ஒன்று கூடி அன்னதானம் வழங்குவது உள்ளீட்ட பல்வேறு நிகழ்வை நடத்துவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

nsmimg680220nsmimg

அந்த மனிதர் எந்த அளவிற்கு இந்த மக்களின் மனதில் இடம் பிடித்து இருந்தால் இந்த அளவிற்கு அவரை தலைமுறை தலைமுறையாக நெஞ்சில் நிறுத்தி வழிபடுவர்.
அவர்தான் அருட்தந்தை லெவே
பிரான்சு நாட்டில் லாலியர் என்ற சிற்றூரில் 1884ம் ஆண்டு பிறந்தவர்.

உடன் பிறந்தோர் மற்றும் தந்தை ஆகியோரை அடுத்தடுத்து பறிகொடுத்த சோகத்தில் இருந்தவரை பக்தியாலும், விசுவாசத்திலும் தேற்றியவர் அவரது தாயார்தான். தாயார் விதைத்த பக்தி மார்க்கம் லெவேவை குருமாராக்கியது.
இந்தியாவில் இறைப்பணியாற்ற முடியுமா என்று கேட்ட போது விருப்பத்தோடு வந்தவர், அதன் பிறகு 64 ஆண்டுகளில் ஒரு முறை கூட தான் பிறந்த பிரான்சு நாட்டிற்கு போகாதவர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள சருகணியில் உள்ள திருஇருதய தேவாலயத்தையே தனது வீடாகவும்,இந்தியாவையே நாடாகவும் கொண்டார்.
தமிழ் மொழியில் தங்கு தடையின்றி எழுதவும், பேசவும் கற்றவரானார்.

ஒரு முறை சருகணி கிராமத்தை காலரா நோய் கடுமையாக தாக்கியது. நோய் தாக்கியவர்களை உற்றமும், சுற்றமும் கூட விட்டுச் சென்ற போது இவர் எங்கும் செல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை தொட்டு தூக்கி நோயுற்றவர்களின் காவலராய் இருந்து அவர்கள் நோய் தீர பாடுபட்டார்.
மழை வேண்டி ஜெபம் நடத்தியவர், ஏழை மீனவர்களுக்கு படகும், வலையும் வாங்குவதற்கு உதவியவர்,கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டவர், நடந்தே அனைத்து கிராமங்களுக்கும் சென்றவர். சாதி, மதம் பாராதவர். ஏழை, எளியவர்களுக்காக எப்போதுமே தனது இல்லத்தையும், உள்ளத்தையும் திறந்து வைத்தவர். இது போன்ற செயல்கள்தான் இவரை மனித நேயம் கொண்ட மாமனிதராக உயர்த்தியது.
இப்படி மக்கள் பணியிலும், இறைப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட லெவே தனது 89 வது வயதில் இறந்தார். இறப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே தனது இறப்பை பற்றி கடிதம் மூலமாக தெரியப்படுத்தினார். இறந்த பிறகு எங்கே புதைக்கப்பட வேண்டும், எப்படி புதைக்கப்பட வேண்டும் என்பதை சொன்னார்.
கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் தமிழ் மண்ணையும், மக்களையும் நேசித்த லெவே இறந்த போது ஊரே ஒன்று கூடி அழுததில் வியப்பேதும் இல்லை.

இது நடந்தது 21/3/73ம் ஆண்டாகும். அவர் இறந்து கிட்டத்தட்ட 46 வருடங்களாகிவிட்ட நிலையிலும், ஒவ்வொரு நினைவு நாளன்றும் அவரது நினைவகத்தில் தவறாது சமபந்தி நடைபெறுகிறது.இந்த சமபந்தி என்பது ஊர்மக்கள் தத்தம் வீட்டில் இருந்து கொடுக்கும் அரிசி பருப்பு காய்கறிகளால் நடத்தப்படுவதாகும்.
பேருக்கு வாழ்வது வாழ்க்கை அல்ல, ஊருக்கு வாழ்வதே வாழ்க்கை என்பதை வலியுறுத்தும் வகையில் வாழ்ந்து சருகணி மண்ணின் புதைந்துள்ள மரகதமாம் அருட்தந்தை லெவேவிற்கு தமது இதயபூர்வமான அஞ்சலிகளை செலுத்த அவரது அண்ணனின் பேரன்களான ஜான்,பிலிப்,சாமுவேல்,சோலன்ஜி ஆகியோர் பிரான்சில் இருந்து முதல் முறையாக இந்த வருடம் வந்திருந்தனர்.வந்தவர்கள் தங்களது தாத்தாவின் மீது ஊர் மக்கள் வைத்திருக்கும் பாசத்தையும் நேசத்தையும் பார்த்து நெகிழ்ந்து போயினர்.
nsmimg680221nsmimg
லெவே பற்றிய வரலாற்று நுாலினை பங்கு தந்தை சூசைமாணிக்கம் வெளியிட்டார் அன்று மாலை லெவேயின் உருவப்படம் ஏற்றிய தேரை ஊர்மக்கள் கூடி இழுத்தனர்.அவரது நினைவுகளை பேசி போற்றினர்.
அவரது நினைவை என்நாளும் தன் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் ஆசிரியரான ஜேம்ஸ்தான் இந்த செய்தி நமக்கு அளித்தவர் அவர் கூறுகையில் அனைவராலும் மதிக்கத்தக்க மனிதராக இருந்த அருட்தந்தை லெவே புனிதர் பட்டத்திற்கான பரீசிலனையில் இருக்கிறார் விரைவில் அவர் புனிதராக அறிவிக்கப்படுவார் அந்தநாளே என்னைப் போன்றவர்களுக்கு பொன்நாள் என்றார் அவருடன் பேசுவதற்காக எண்: 9894243421.
- எல்.முருகராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அற்புதரை வாழ்த்தி வணங்கி அவர் பாதம் பணிவோம் , இதே சருகனி மாதாகோவில் பாதிரியார் ஒருவர் பெரிய மருது ஒருமுறை வெள்ளையர்களிடமிருந்து தப்பிவரும்போது காப்பாற்றினார் பிறகு மருது அந்த கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளார்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மனித நேயத்துக்கும், அன்பு சேவை உள்ளத்துக்கும் நாடு, மொழி, மதம் என்ற வேற்றுமை கிடையாது வாழ்க இவர்தம் புகழ்

  • Premanathan S - Cuddalore,இந்தியா

    இந்த அற்புத மனிதரை வணங்கி வேண்டுவோம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement