Advertisement

நழுவிய போலீசார்... தடுமாறிய ஆசிரியர்!

ஊருக்குள் எந்த பக்கம் திரும்பி னாலும், 'பெரியோர்களே... தாய்மார்களே! உங்கள் பொன்னான ஓட்டுக்களை...' என்று காது கிழியும் அளவுக்கு, பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.அனைத்தையும் கேட்டவாறே, சித்ராவும், மித்ராவும் வண்டியில் புறப்பட்டனர். அப்போது,எதிரில், பா.ஜ., கொடி கட்டியவேன் வந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''திருப்பூரில் போய் வேலை செஞ்சா போதும். நீங்க அங்க போங்கன்னு, திருப்பி அனுப்பிட்டாங்களாம்,'' என்றாள்''யாரைக்கா சொல்றீங்க. எலக்ஷன் ஆபீசர்களையா?'' ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.
''இல்லக்கா, தாமரை கட்சியை சேர்ந்த திருப்பூர் நிர்வாகிகள், சிலர், கோவைக்கு எலக்ஷன் வேலை செய்ய போனாங்களாம். இங்க, நம்மளவிட, இலைக்கட்சியினர், நல்லாவே, வேலை செய்றாங்க,''''நீங்க... திருப்பூருக்கு போயி, வேலை செய்யுங்கன்னு, திருப்பி அனுப்பிட்டாங்க. ஆனா, என்ன கொடுமைன்னா, திருப்பூரில், அ.தி.மு.க.,வினர், யாரும் மதிக்கலைன்னுதான், கோவைக்கு போனாங்க. அங்க அப்படி சொன்னதால், செவத்தில் அடித்த பந்து மாதிரி, இங்கேயே வந்துட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.''திருப்பூர் தெற்கு தொகுதியில நடந்த கூத்த கேளுங்கா''''அப்படியென்னடி பெரிசா நடந்திடுச்சு''''போன சண்டே, போஸ்டல் ஓட்டுப்பதிவு நடந்துச்சு. அதில், டிரெய்னிங் முடிஞ்சதும், ஆசிரியர்களுக்கு போஸ்டல் ஓட்டுப்பதிவு சம்பந்தமா சரியா டிரெய்னிங் கொடுக்கலையாம். வேட்பாளர் பேருக்கு, நேரா 'டிக்' அடிச்சு, கவரில் போடாமல், அப்படியே பெட்டிக்குள்ள போட்டுட்டாங்களாம்,''''இதைப்பார்த்த சில ஆபீசர்ஸ், எல்லோரையும் வெயிட் பண்ண சொல்லி, கட்சிக்காரங்க முன்னாடி பெட்டியை திறந்து, அதுக்கு அப்புறமா, கவரில் போட்டு, பண்டலில் சேர்த்திருக்காங்களாம்,'' என்று சொன்ன மித்ரா, ''அக்கா... அந்த கடையில நிறுத்துங்க. பில்டர் காபி குடிச்சிட்டு போகலாம்,'' என்றதும், சித்ரா வண்டியை நிறுத்தினாள்.இருவரும் உள்ளே ஆர்டர் கொடுத்து விட்டு, அமர்ந்தனர்.''மோசடி நபர்களை கையில் கிடைத்தும், திருப்பி அனுப்பிய கதை தெரியுமா மித்து?,''''யாருக்கா... எங்கே?''''திருப்பூரில், போலி'ஆர்.சி.,' புக் தயாரிச்சு, அவற்றை அடகு வச்சு, பல பைனான்ஸ்காரங்க கிட்ட பணத்தை வாங்கி ஒரு கும்பல் ஏமாற்றி வந்தது.

போன வாரம், அந்த கும்பல், பைனான்ஸ் நிறுவனத்தில், ஒரு புக் அடகு வைக்கும்போது, கையும் களவுமா சிக்கியிருச்சு,''''பைனான்ஸ்காரங்க, ரெண்டு பேரையும், ரூரல் போலீசில் ஒப்படச்சிட்டாங்க. ஆனா, அதிகாரி, எப்.ஐ.ஆர்., போடாம, ரெண்டு பேரையும் அனுப்பிச்சுட்டாரு. இதைப்பத்தி, பைனான்ஸ்காரங்க கேட்டதற்கு, முக்கியமானஆளை புடிச்சிட்டு, இவங்களை ரிமாண்ட் பண்ணிக்கலாம்னு,சப்பைக்கட்டு கட்டுறாராம். ஒரு அதிகாரி இப்படியிருந்தா, தப்புசெய்யறவன் கூட எதுக்கு பயப்படறான்?'' ஆவேசமாக பேசினாள் சித்ரா.''அக்கா, அந்த ஸ்டேஷனில், உண்மையான புகாருக்கு எப்.ஐ.ஆர்., போடுல. இந்த ஸ்டேஷனில் பொய்ப்புகார் கொடுத்தவுடன், என்ன ஏதுன்னு, விசாரிக்காம எப்.ஐ.ஆர்., போட்டுத்தராங்க,''''மித்து, இந்த கூத்து எங்கே நடந்தது?''
''சமீபத்தில், ஒரு நிர்வாகத்தில், ஆவணங்கள் திருடப்பட்டு, கொலை மிரட்டல் விடப்பட்டது என, பொய் புகார் ஒன்னு, வடக்கு ஸ்டேஷனுக்கு வந்துதாம். போலீசாருக்கும்இது பொய்ப்புகாருன்னு நல்லா தெரியும்,''''ஆனா, கொஞ்சம் கூட யோசிக்காம, உடனே எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்க. இதே, சாமானிய மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு புகார் கொடுக்க போன, 'சி.எஸ்.ஆர்.,' போடறதுக்கே யோசிப்பாங்காங்க்கா,''''நீ... சொல்றது கரெக்ட் மித்து. சட்டங்கள் எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும்தான்னு, நல்லாவே தெரியுது,''காபி வரவே இருவரும் குடிக்க துவங்கினர்.''போலீஸ்காரங்களும், வருவாய்த்துறைக்கும் முட்டிகிச்சு தெரியுமா,'' என்றாள் சித்ரா.''எங்கே நடந்தது?''''ரெண்டு நாளைக்கு முன்னாடி, தெற்கு போலீஸ் லிமிட்டில் நடந்த தீ விபத்தில், ஐந்து குடிசை எரிந்து சாம்பலானது. அதில், மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர் தீயில் சிக்கி இறந்தார். இறந்தவருக்கு, அம்மா இருக்காங்க.

அவங்ககிட்ட புகார் வாங்கி எப்.ஐ.ஆர்., போடாம, வி.ஏ.ஓ., கிட்ட புகார் கேட்டிருக்காங்க,''''ஆனா, அந்த வி.ஏ.ஓ., லேடி, நான் எதுக்கு புகார் தரணும் இறந்தவருக்கு குடும்பம் இருக்குதல்ல, என, 'பல்டி' அடித்தார். அதுக்கப்புறம், இறந்தவரோட அம்மாவிடம் புகார் வாங்கி, எப்.ஐ.ஆர்., போட்டாங்க,''''இந்த இழுத்தடிப்பினால, 'போஸ்ட்மார்டம்' லேட்டாகி, உறவினர் போராட்டம் செய்ய இறங்கிட்டாங்க. அப்புறமா, சமாதானம் செஞ்சிட்டாங்க. ஏதோ, கடமைக்கு வேலையை செஞ்சா போதும்னு நினைச்சா, இப்படித்தான் இருக்கும்,'' என்று சொன்ன சித்ரா, காபிக்கு பணம் கொடுத்து விட்டு, வெளியே சென்றாள். மித்ராவும் தொடர்ந்தாள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement