Advertisement

கிரியேடிவ் போட்டோகிராபி எப்படி?


nsimg2255725nsimgசென்னை கேமிரா பேர் கண்காட்சியில் புலிவலம் ரவியின் கிரியேடிவ் போட்டோகிராபி எடுப்பது எப்படி என்கின்ற வகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
nsmimg684109nsmimgபேச்சு மூச்சு எல்லாமே போட்டோகிராபிக்காக என்று வாழ்பவர் புலிவலம் ரவி.மிக எளிய முறையில் போட்டோகிராபியை கற்றுத்தருபவர்.

nsmimg684110nsmimg
கேமிரா வாங்கி வைத்திருப்பவர்கள் பலருக்கும் அந்த கேமிராவில் உள்ள செட்டிங்ஸ் பற்றி தெரியாது, எதற்கு வீணாக அந்தப்பட்டனை அலுத்தி கேமிராவைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளது உள்ளபடி என்று டிஜிட்டல் கேமிராவைக்கூட பழைய காலத்து கேமிரா போல பயன்படுத்திவருவர்.


அவர்களது கேமிரா பற்றிய அச்சம் மற்றும் தயக்கத்தினை போக்கி கேமிரா செட்டிங்சை சரியாக கையாள்வதன் மூலம் இப்போது எடுப்பது போல பல மடங்கு சிறப்பான படங்கள் எடுக்கலாம் என்பதை சொல்லித்தந்து வருபவர்.
இதற்காக இதுவரை 107 வகுப்புகள் நடத்தியுள்ளார் .ஐம்பதிற்கும் அதிகமான கேமிரா தொடர்பான தொழில் நுட்ப கட்டுரைளை எழுதியவர்,தொடர்ந்து எழுதிவருபவர்.சென்னையில் இன்று நடத்தியது 108 வது வகுப்பாகும்.
இந்த வகுப்பில் கிரியேட்டிவ் போட்டோகிராபி எடுப்பது எப்படி என்பதை சொல்லிக்கொடுத்தார்.இதற்காக அவர் எடுத்த பல படங்களை டிஜிட்டல் திரயைில் ஒடவிட்டு போட்டோகிராபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விளக்கமும் கொடுத்தார்.
இந்த பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக போட்டோகிராபர்கள் குறிப்பிட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த கேமிரா பேர் பிரசன்னா பயிற்சியாளர் புலிவலம் ரவிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
nsmimg684112nsmimg
புலிவலம் ரவியின் அடுத்த பயிற்சி வகுப்பு பற்றி தெரிந்து கொள்ள அவரையே தொடர்பு கொள்ளவும் எண்:9442777240.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • krishna - madurai,இந்தியா

    நீங்க சொல்லுற அளவுக்கு ஒர்த் இல்ல.. படம் எடுக்கிற ஆட்களுக்கே படம் காட்டுற வேலைய பாக்குறார். மத்தபடி சரக்கு இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement