Advertisement

பணத்தை சுருட்டிய இலைக்கட்சியினர்...

விநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகம், எங்கு பார்த்தாலும், பக்தர்கள் கூட்டம். கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்த பின், தெப்பக்குளத்தின் படித்துறையில் அமர்ந்தனர்.

''போன சட்டமன்ற தேர்தலில், திருப்பூரில், 570 கோடி ரூபாய் பிடிபட்டதால, தேர்தல் அதிகாரிங்க ரொம்ப கவனமாக இருக்காங்க,'' ஆரம்பித்தாள் மித்ரா.''அதே மாதிரி பணம் மாட்டுமான்னு சொல்ல முடியாது; முறைகேடா எடுத்துட்டுப்போற பணம் மாட்டுமில்ல,'' என்றாள் சித்ரா.''பணமெல்லாம், பத்திரமா போயிருச்சுக்கா.
எப்படியெல்லாம், பட்டுவாடா ஆகப்போகுதுனு பாருங்க. பெரிய வண்டியில கொண்டுபோனா பிரச்னைன்னு, டூவீலரில், கொண்டு போய் சேர்த்திருக்காங்க''.''பறக்கும் படை, எவ்வளவு சுத்திட்டு இருந்தாலும் வெளியே கிடைக்காது. 'கன்ட்ரோல் ரூம்'ல இருந்து தகவல் வந்தால் மட்டும்தான், பறக்கும்படை போறாங்க. இல்லைன்னா, கொளுத்துற வெயிலுக்கு, 'குளுகுளு'ன்னு நிழல்தரும் மரத்தடியில, பறக்கும் படை வேன், மணிக்கணக்கில், நின்னுட்டு இருக்குது'' என்றாள் மித்ரா.''ஏய்... மித்து. வேட்பாளர் கொடுத்த பணத்தை, கமுக்கமா அமுக்கிட்டாங்களாம். ஒனக்கு தெரியுமா?''''ம்... ஹூம் தெரியாதுங்களே''''பல்லடம் தொகுதியில வர்ற திருப்பூர் ஒன்றியத்துல, 'பூத் கமிட்டி'க்கு வந்த பணமும், வாக்காளருக்கு வந்த பணமும் மாயமாயிடுச்சாம். 'சரக்கு' வாங்கி வைக்கறோம்னு சொல்லி, 'பூத் கமிட்டி' அமுக்கிட்டாங்களாம்.

தாமரை கட்சிக்காரங்க கொடுத்த பணத்த, இப்படி இலைக்கட்சிகாரங்க மடக்கிட்டாங்களேனு, கூட்டணி கட்சிக்குள்ள ஒரே புலம்பலா இருக்காம்''. என்றாள் சித்ரா.''கட்சிக்காரங்க குறை வச்சாலும், கலெக்டர் சரிபண்ணிட்டாராம்,'' என்ற மித்ரா, நிலக்கடலையை சாப்பிட ஆரம்பித்தாள்.சித்ராவும், நிலக்கடலையை மென்றவாறே, ''தேர்தல் பிரசாரத்தில் 'டங் ஸ்லிப்' ஆவது பிரச்னையாகவே மாறி வருகிறது,'' என்றாள் மித்ரா.''உண்மைதான் மித்து. போன வாரம் அவிநாசியில் நடந்த தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், வைகோவை தி.மு.க., பொது செயலாளர் என ஒருவர் மைக்கில் அறிவிக்க, உடனே சுதாரித்து கொண்ட மாவட்ட செயலாளர் அதனை திருத்தி சொன்னராம்''''ஆனால், திருப்பூர் கூட்டத்தில் அவர் பேசும் போது, தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வருவார்.
இந்த நாட்டின் முதல்வராக ராகுல் வருவார் என உளறி கொட்டினார். தொண்டர்கள் சிலர் தலையில் அடித்து கொண்டே, பாதியில் எஸ்கேப் ஆயினர்''.''அக்கா... வெயில் கொளுத்தி எடுக்கறதினால், எல்ேலாருக்கும் இப்படி ஆயிடுச்சோ,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.''ஏன்... மித்து! 24 மணி நேர 'சரக்கு' விக்கற மேட்டரில், ஐ.எஸ்., போலீஸ்காரங்க 'வசூலில்' வெளுத்து வாங்கறாங்களாம். ஏதாவது தெரியுமா?''''ஆமாங்க்கா... உண்மைதான். அவங்க மட்டுமில்ல. எல் அண்ட் ஓ., போலீசும்தான். தெற்கு, வடக்குன்னு இல்லாம, எல்லா திசையில இருக்கற ஸ்டேஷன்களில், 'மாமூல்' மழை கொட்டுதாம். புதுசா வந்த கமிஷனர், வெளிய வராதது, போலீசாருக்கு ரொம்ப சவுகரியமா போச்சு,''''பழைய கமிஷனர் மாதிரி, புதுசா வந்தவரும், 'சாட்டையை சுத்தினாதான்' சரிப்பட்டு வருவாங்க போல. அது இருக்கட்டும், ஸ்டேஷன் அதிகாரியை கெடுக்கறதே, டிரைவர்தானாம், ஒரு பேச்சு ஓடுது,'' என்றாள் சித்ரா.
''என்னக்கா... அப்படி யாரு?''''கட்டபொம்மனுக்கு முன் வர்ற பேருள்ள ஸ்டேஷனில் உள்ள அதிகாரி, சட்ட விரோதமான செயல், ஸ்டேஷன் வழக்கு தொடர்பான விஷயங்களில் வைட்டமின் 'ப' மழையில் நனையக்கூடிய ஆளுன்னு, ஏற்கனவே நாம பேசியிருக்கோம்,''''இப்ப... அவரோட எல்லா விதமான 'வேலை'களையும் 'பெருமாளின்' இன்னொரு பெயரை கொண்ட ஸ்டேஷன் டிரைவரே பார்த்துக்கறாராம். அதிகாரி கெட்டுப்போறதுக்கே, டிரைவர்தான் காரணமுன்னு, போலீசார் மத்தியில, பட்டிமன்றமே நடந்ததாம்.
போலீசார் மட்டுமில்லாம, அதிகாரியோட குடும்பத்தினரும், டிரைவரையே குற்றச்சாட்றாங்களாம்''.''சரி, டிரைவர்தான் மோசம்னா, அதிகாரி ஒழுங்கா இருக்க வேண்டியதுதானே. அவருக்கு தெரியாதா? எல்லாம், தெரிஞ்சேதான் நடக்குது,''''மித்து... நீ, சொல்றதும் ஒரு விதத்தில் உண்மைதான். பெண்ணை, கண்ணுல காட்டி, பணத்தை சுருட்டிட்டு போன சம்பவம் ஒன்னு நடந்துச்சு,''''என்னக்கா சொல்றீங்க, மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்களா,''''ஆமாண்டி. வடக்கு எல்லைக்கு உட்பட்ட, ஒரு ஓட்டலில் சமூக விரோத தொழில் நடக்குதாம்.
போன் மூலம், ஒரு வாலிபரை கும்பல் தொடர்பு கொண்டதில், அவரும், ஓட்டலுக்கு போயிருக்காரு''''ஒரு பொண்ண கண்ணுல காட்டிட்டு, ஏ.டி.எம்., கார்டு விவரங்களை வாங்கி, 14 ஆயிரத்தை சுருட்டிட்டு ஏமாத்திட்டாங்களாம். இது போலீசுக்கு தெரிஞ்சுமே, வழக்கம் போல, 'கப்சிப்'ன்னு இருக்காங்க''.''அக்கா... நல்ல நாளிலேயே நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. இப்ப, எலக்ஷன் 'டைம்' கேட்கவே வேண்டாம்.
சொல்ல மறந்துட்டேன். நாளன்னைக்கு மறக்காம ஓட்டு போட்டிருங்க,''''ஏண்டி... நான் மறப்பேனா... நீயும் உங்க தெருவிலுள்ளவங்கல, மறக்காம, ஜனநாயக கடமை ஆற்றச்சொல்,'' சொன்ன சித்ரா, ''சரி... மித்து கிளம்பு. நேரமாயிடுச்சு,'' என்றதும் மித்ரா எழுந்தாள்.அப்போது, வானில் வாணவேடிக்கை பல வண்ணங்களில் ஒளிர்ந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement