Advertisement

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

Share

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
-காழியூர் நாராயணன்.

சென்னையில் வசிக்கும் பிரபல ஜோதிடரான காழியூர் நாராயணன் திநகர் ஹூயூமர் கிளப் நிகழ்வில் நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கிளப் உறுப்பினர்கள் வரிசையாக ஜோக் சொல்லிக் கொண்டு வந்தனர் அம்பத்துார் நாராயணன் என்பவர் பேசுகையில் ஜோசியமே படிக்கக்கூடாது, பார்க்கக்கூடாது என்று நினைப்பேன் மறந்து போய் காழியூர் நாராயணனின் நாள் பலனை ஒரு நாள் படித்துவிட்டேன் அதில் பணவரவு என்று போட்டிருந்தது.
நமக்கு இப்போது எண்பத்தைந்து வயது, சிவனே என்று வீட்டில் உட்கார்ந்து இருக்கிறேன், நமக்கு எப்படி பணவரவு இருக்கும் அது எப்படி கிடைக்கும்? என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதே நாளிதழில் ஒரு ஒரத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.அதில் எண்பது வயதிற்கு மேலானவர்களுக்கு 3 ஆயரம் ரூபாய் வழங்கப்படும் என்று போட்டிருந்தது.ஆகா ஜோசியம் பலிக்கப்போகிறது என்று முடிவு செய்து விளம்பரத்தில் சொல்லப்பட்ட இடத்திற்கு ஆட்டோ எடுத்துக்கொண்டு போனேன்.போகவர முன்னுாறு ரூபாய் ஆட்டோ வாடகை பேசிக்கொண்டேன்.மூவாயிரம் ரூபாயில் முன்னுாறு ரூபாய்தானே போகட்டும் என்று எண்ணிக்கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றேன்.
அங்கே இருந்தவர் ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு என்று எல்லா கார்டுகளையும் சரிபார்த்துவிட்டு நீங்கள் பணம் பெற தகுதியானவர்தான் ஆனால் நாங்கள் இந்தப் பணத்தை உங்கள் பெற்றோரிடம்தான் ஒப்படைப்போம் என்றனர்.
அட ஈசுவரா அவுங்க போய்ச்சேர்ந்து நாற்பது வருஷமாச்சு எப்படியப்பா அழைச்சுட்டு வருவது என்று கேட்டேன் அதெல்லாம் முடியாது சார் ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் என்று சொல்லிவிட்டனர்.
அட கிராதகர்களா என்று சபித்துவிட்டு வெளியே வந்தேன் என் தொங்கிப்போன முகத்தைப் பார்த்துவிட்டு நடந்தை கேட்டு அறிந்த ஆட்டோக்காரர் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு இருநுாறு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச்சென்றார்,ஆக அந்த வகையில் எனக்கு நுாறு ரூபாய் வரவு என்று எடுத்துக்கொண்டேன் என்று நகைச்சுவையாக பேசினார்.
அந்த நாள் பலன் எழுதிய காழியூர் நாராயணன் இங்கே வந்திருக்கிறார் அவர் தனது ஜோசிய ஞானம் காரணமாக இந்த லோக்சபா தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்வார் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.பார்வையாளர்கள் சிலரும் அதே கேள்வியை கேட்டனர்.
இதை அடுத்து மைக்கை பிடித்த காழியூர் நாராயணன், ஜோசியம் என்பது அவரவர் மனதிற்கு ஆறுதல் தேடும் ஒன்றுதான் ஆனால் ஆறுதல் தேடுவது ஒன்றையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டியது இல்லை. ஒருவருக்கு சரியாக இருப்பது இன்னோருவருக்கு சரியாக இருக்காது ஆகவே நடந்தால் சந்தோஷப்டுங்கள் நடக்காவிட்டால் வருத்தப்படாதீர்கள் என்றவர் எல்லோரும் இந்த தேர்தல் முடிவு பற்றிக் கேட்கிறார்கள் என் மண்டை உடையாமல் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று சிரித்தபடி கேட்டுவிட்டு அவரும் அமர்ந்தார்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மிக அருமையான ஒரு செய்தி , ஆனால் பலர் தவறாக ஜோசியம், மற்றும் கூறுபவர்களை விமர்சித்தது அவரவர்கள் மனதுக்கு சரியாகப்படலாம். ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டியது . உண்மையைக் கூறினால் ஜனநாயகத்தில் உயிருக்கு ஆபத்து, இதுதான் செய்தி. அதே போன்று நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் இன்னலுக்கு உள்ளாவார்கள், தற்போது மழை இல்லை. இன்று மேகமூட்டமாக இருக்கிறது, சில்வர் நைட்ரைட் குச்சியைக்கொண்டு செயற்கை மழை பொழிய வைத்திருக்கலாமே ?? ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எந்த துறையாக இருந்தாலும் தினம் தினம் ஏதாவது ஒரு தொல்லை கொடுத்துக்கொன்டே இருக்கவேண்டும், இல்லையென்றால் மக்கள் ஒற்றுமையாகி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள், ஆகவே நல்ல கருத்துக்களை ஜனநாயகம் விரும்பாது, வந்தே மாதரம்

 • Tamil Mozhi - salem,இந்தியா

  உண்மை

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  சோதிடம் மூட நம்பிக்கை என்று சொல்லுவோர் "சோதிடம் என்பது ஹிந்து மதத்துக்கே சொந்தமானது" என்கிற எண்ணத்தில் அறியாமையில் உழல்கிறார்கள் .... பல மதங்களில் சோதிட நம்பிக்கை உண்டு ...... சோதிடம் பார்க்கும் முறை வேறாக இருக்கலாம் .....

 • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  நடந்ததை சொல்லி விடலாம் நடக்க போவது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

 • Ganapathy - Bangalore,இந்தியா

  ஜோதிடம் போலி அல்ல, சில மருத்துவர்கள் நாடி பிடித்து ஸ்டெதெஸ்கோப்பை வைத்தவுடன், ஜுரம் இறங்கும். இது அவர்களின் கைராசி, தெய்வம் அவர்களுக்கு கொடுத்த வரம் . மருத்துவ படிப்பு எல்லாம் ஒண்ணுதான் . அனல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் மேலே கூறியதுபோல அனுக்கிரஹம் கிடைத்துள்ளது . அதுபோலத்தான் ஜோடித்திடக்கலை , அதில் பிசகு இல்லை , படித்து கூறுவரிடம் பிரச்சனை உள்ளது . உண்மையாக சொல்லப்போனால், ஆண்ட ஜோதிடருக்கு நல்ல காலம் இல்லை என்பதே சரி. நிற்க திருமணப்பொருத்தம் குறித்து skv பெங்களூர் மேலே கூறியது ஒருவகையில் சரி, திருமணத்திற்காக அதிதீவிர பொருத்தம் பார்த்து , திருமணம் ஆகாமல் தடை மேல் தடை போடுவது ஒருவிதமான முட்டாள்தனம்,. ஜாதகம் குறிக்கப்படும் பஞ்சங்ககமே இரண்டுவகை உள்ளது . வாக்ய பஞ்சங்ககம், திருக்கணித பஞ்சாங்கம் . இந்த விடயத்தில் என் சொந்த அனுபவமே உதாரணம் . ஒருவர் கூறுவார் எனக்கு கார்த்திகை நான்காம் பாதம் என்று, மற்றவர் கூறுவார் இல்லவே இல்லை, ரோகினி தான் . இப்படி ஆண் மற்றும் பெண் வீட்டார் இருவகையில் ஆலோசனை வரும்போது ஏதடா வம்ப போயிற்று என்று வேண்டவே வேண்டாம் என்பார்கள் இன்னமும் சிலரோ, நான் ஏதோ போலி ஜாதகம் தந்துள்ளதாய் நினைப்பார்கள்.

 • skv - Bangalore,இந்தியா

  நாம் வோட்டுப்போட்டாச்சு அவ்ளோதான் எவன் வந்தால் என்ன தோற்றால் என்ன , மோடிவந்தால் நல்லது காடு நன்னாயிருக்கும் என்று நம்புவோம் கடந்த அஞ்சுவருஷமா தான் மக்களுக்கான ஆட்ச்சியே நடக்குது

 • skv - Bangalore,இந்தியா

  எல்லா சோசியங்களும் பக்க வடிகட்டினபுளுகுகள் . என் சாதகத்தை பார்த்த சோசியல் ஒருவன் சொன்னான் இந்தப்பொண்ணு திருமணமே ஆவதுர்காஷ்டம் பூராடம் நக்ஷத்திரம் நீண்டநாளில் நன்னாயிருக்கோணும்னா ரெண்டாந்தாரமா தரணும்னு சொன்னான் என் தந்தை கோவிச்சுண்டு என் அண்ணா க்கள் நேக்கு இருந்த சாதகம் எல்லாம் கிழிச்சு வெந்நீர் அடுப்பில் போட்டு எரிச்சுட்டாரு , நான் என்றுமே இதுலே நம்பிக்கை அற்றவள் , பிகாஸ் என் மாமாவே சோசியர் . நேக்கு தெரிஞ்சு அவர் பார்த்த வரங்களெல்லாம் அவ்ளோ கஷ்டங்கள் பட்டாங்க என்பது உண்மை எனக்கு சாதகம் கிடையாதுன்னு சொன்னோம் என் மாமியார் க்கு என்னை ரொம்பவே பிடிச்சது இந்த லாஸ் வீட்டுலே எல்லோரும் வந்துபார்த்து என்னவரும் பார்த்து மனம் ஒத்த திருமணம் , என் மாமியார் தன து 78வயசுலேதான் காலம் ஆனார் , சுமங்கலியா சந்தோஷமா இருக்கேன் பேரன்பேத்திகள் என்ரூ குறை யொன்றுமில்லே எப்போதும் மகிழ்ச்சியாகாவேஇருக்கேன் , குறை இருக்கும் கண்டுக்கறதே இல்லே இதுவரை எங்கள் வீட்டுலே ஜோசியன் வந்ததே இல்லே என் பிள்ளைகள் பொண்ணு யாருக்கும் சாதகம் கிடையாது , நன்னா படிக்கவச்சுருக்கேன் னால குணமுடன் பண்புடன் வாழ பழக்கிருக்கேன் அதுபோதும் VOTTUKIDAIC

 • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

  இந்த காழியூர் நாராயணன் 100% போலி ஜோதிடர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement