Advertisement

அன்னையர் தினத்திற்கு ஐந்து மொழிகளில் பாடி அசத்தினார் ஜனனி

Share


எஸ்.ஜே.ஜனனி


திரைப்பட இசை அமைப்பாளர்,பின்னனி பாடகர்,கர்நாடக சங்கீத பாடகி என இசையில் பல முகம் கொண்ட கலைமாமணி ஜனனி வரும் 12 ந்தேதி கொண்டாடப்பட உள்ள ‛அன்னையர் தினத்தை' முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அம்மாவை பாராட்டி பாடியுள்ளார்.

இவரே இசை அமைத்து பாடியுள்ள இந்த பாடல் அருமையாக வந்துள்ளது.தன் தாயின் மீது அளவற்ற பாசம் கொண்ட குழந்தையின் கொஞ்சலும் குதுாகலமும் ஏக்கமும் பாசமும் பாடலில் எதிரொலிக்கிறது.


கவிஞர் ரமேஷ் வைத்யா தமிழில் எழுதிய பாடலை அதன் அதே ஆழத்துடனும் அர்த்தத்துடனும் மற்ற நான்கு மொழிகளிலும் எழுதி வாங்கி அதே ராகத்தில் ஜனனியே பாடியுள்ளார்.மற்ற மொழி அறிஞர்கள் பாடலைக் கேட்டுவிட்டு தமது மொழிக்காவே எழுதியது போல உள்ளது என ஜனனியை பாராட்டியுள்ளனர்.


இந்த புதிய முயற்சிக்கு ஜனனியின் மாமாவும் ஜேஎஸ்ஜே ஆடியோ நிறுவனருமான சங்கர் கணேஷ் பெருமுயற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுதான் பாடல் வரிகள்:


தாயைப் பாட தனிச்சொல் தேட


தவிக்கும் சேயினை பாரம்மா


கூவும் நானே குழந்தைக் குயிலே


குழறும் வார்த்தைகள் போதுமா


உலகில் பெரும்பொருள் நீதானே


அதிலும் அரும்பொருள் நீ


விடியல் நிலவினைப் போல் என்னை


மடியில் வளர்த்ததும் நீ


பூமி யாவும் தேடினாலும்


தாய்மைக்கிணை ஒன்று கிடைக்குமா


வானம் போலே வளரும் நேசம்


வேறு உறவினில் இருக்குமா


பிறந்த முதல்நொடி பார்த்த முகமே


பிரியாது உடன்வருமே


உடலின் உதிரத்தில் ஊறும் சுனையே


உணர்வோடு கலந்திடுமே - என்


வாழும் நாளெலாம் அம்மா அம்மா


என உயிரும் நினைத்திடுமே


வீழும்போதும் மலரின் பாய்போல்


சூழும் கரங்களில் விழுகிறேன்


ஏழு வாழ்க்கை எனக்கென்றாலும்


நீயென் நிழலெனத் திரிகிறேன்


எதுவும் பலன் எதிர்பார்ப்பதில்லையே


எனக்காக உயிர் கொடுப்பாய்


அறிவின் துணையுடன் தீர்க்க இயலாப்


புதிராக விளங்குகிறாய் உன்


பார்வை போதுமே அம்மா அம்மா


எனதிருளும் வெளிச்சம் ஆக


பாடல்களை கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேட்கலாம்.


https://sjjananiy.com/album/1080569/amma-maa-dedication-songs-to-mother-composer-music-producer-arranger-singer-s-j-jananiy

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement