Advertisement

இங்கே யார் பைத்தியம்...?

79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் பெண்ணான ஹேமா சேன் என்பரை பற்றிக் கேள்விப்படும் எல்லோரும் அவர் என்ன பைத்தியமா என்ற பார்வையோடும் ஆச்சர்யத்தோடும்தான் அவரைப் பார்க்கப் போகிறா்கள்
nsmimg690669nsmimgகாரணம் அவரது வாழ்க்கை முறை

மகராஷ்ட்ரா மாநிலம் புனே நகரின் புத்தா பெத் என்ற பகுதியியில் வசிக்கும் ஹேமாவிற்கு இப்போது 79 வயதாகிறது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், வீட்டில் மின்சாரம் இல்லாமலே வளர்ந்து வந்தார், ஒரு கட்டத்தில் அரசாங்கம் மின் இணைப்பு தரமுன்வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.மின்சாரம் இல்லாமலே வாழ்வது என்றும் முடிவெடுத்துவிட்டார்.

இத்தனைக்கும் இவர் சாதாரண பெண் அல்ல புனே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் பின் கார்வரே பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் பேராசிரியையாக இருந்தவர்.

சுற்றுச்சுழல் மற்றும் இயற்கையை மிகவும் நேசிக்கும் இவர் இது தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பணி ஒய்வுக்கு பிறகு தான் எழுதிய வார்த்தைகளின்படியே வாழ்வதற்காக இந்த இடத்தை தேர்வு செய்து வந்துவிட்டார்.

பெரிய இடம் ஆனால் சின்ன வீடு எங்கும் மின்சாரம் கிடையாது வீட்டைச்சுற்றிலும் விதவிதமான மரங்கள் அந்த மரங்களில் அமர்ந்து சங்கீதம் பாடும் பறவைகள்.இது போததென்று இவரின் செல்லங்களாக நாய்,பூனை,கீரி போன்ற வளர்ப்பு பிராணிகளும் உண்டு.

பறவைகளின் சங்கீத சத்தத்தோடு இவரது பொழுது விடிகிறது.தனக்கும் தனது வளர்ப்பு பிராணிகளுக்கும் உணவு தயாரித்துவிட்டார் என்றால் பிறகு பகல் முழுவதும் மரங்களை பார்ப்பதும்,பறவைகள் விலங்குகளுடன் பேசுவதுமாக வாழ்க்கை இனிமையாக போகிறது பொழுது சாய்ந்ததும் இவரது அன்றைய பொழுதும் முடிகிறது.இங்குள்ள ஒவ்வொரு மரமும் பறவையும் இவருக்கு மிகவும் சிநேகம்.

இடை இடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவதிலும் படிப்பதிலும் ஆழ்ந்துவிடுகிறார்.

ஒரு நாள் அவ்வளவு வேண்டாம் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது இந்த அம்மணி எப்படி மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலர் இவரை சந்திக்கின்றனர்.

அப்படி சந்திப்பவர்களிடம் இவர் சொல்வது உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள் எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன் புத்தர் சொன்னது போல அவரவர் வாழ்க்கையை வாழவிடுங்கள் அது போதும் என்கிறார்.

உணவு,உடை,உறைவிடம் இது மூன்றும் தானே ஒரு மனிதருக்கு முக்கியம் மின்சாரம் என்பது இப்போது வந்ததுதானே இது இல்லாமல்தான பழங்காலத்தில் பல ஆயிரம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.

மின்சாரத்திற்கு அடிமையாகிவிட்டால் அது தரும் சுகத்திற்கு ஆடம்பரத்திற்கு ஆச்சர்யங்களுக்கு அடிமையாகிவிட நேரிடும் உங்கள் உலகில் மின்சாரம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிடும் என்னைப் பொறுத்தவரை மின்சாரம் இங்கு வந்தால் என் வாழ்க்கையே சுருண்டுவிடும்.


இந்த வீட்டை இந்த இடத்தை நிறைய விலை கொடுப்பதாக சொல்லி கேட்கின்றனர் அவர்களிடம் இந்த வீட்டை கொடுத்துவிட்டால் எனது பறவைகள் எங்கே செல்லும் எனக்கு பிறகும் இந்த இடமும் இந்த வீடும் இங்கு வரும் வசிக்கும் பறவைகளுக்குத்தான் சொந்தம் என்கிறார் உறுதியாக.


இந்த உலகம் எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கானதுதான் நான் யாருக்கும் எவருக்கும் இடையூறு தராமல் இயற்கையோடும் பறவைகளோடும் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்னைப் போய் பைத்தியம் என்கின்றனர் நீங்களே சொல்லுங்கள் நான் பைத்தியமா?

கேள்வியை ஹேமா எளிதாக கேட்டுவிட்டார் பதில்தான் நம்மிடம் இல்லை.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இன்றய விஞ்ஞான உலகில் மின் பயன்பாடின்றி ஒருவர் இருப்பது ஆச்சர்யம் ,இவருக்கு மின்கட்டண பில் இன்னும் அந்த மாநில அரசு அனுப்பாததும் ஆச்சர்யம்

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  ஆப் தி கிரிட் என்று OFF the Grid இங்கும் நிறைய மக்கள் வாழ்கின்றனர். செலவு மிக குறைவு. மன நிறைவு அதிகம்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மிகவும் கொடுத்துவைத்தவர். வாழ்க்கை நமக்காக வாழ்வதற்கே

 • skv - Bangalore,இந்தியா

  எங்கள் பகுதி லே நாங்கள் இருக்கும் இடத்துலே நெறைய புங்கிமரங்கள் வரிசையா இருக்கும் நிழல் தரும் புங்கைமரக்காற்று ஹெல்த்துக்கும் நல்லது அதுலே நெறைய பறவைகள் இருக்கு பொங்கலுக்கு விழா எடுப்பாங்க அப்போது முடி விளக்குகளை தோரணமா கட்டி தொங்கவிடுறாங்க அப்பொட்ஜ்க்கு எல்லப்பறவைகளும் எங்கோபோயிடும் மின்விளக்குகளைஅகற்றியதும் தான் மீண்டும் வருகின்றன மீண்டும் வரும்வரை பறவைகளின் கூவல் இல்லாது மனசு ஏங்கிவிடும் மரத்தடிலேயே தான் நாங்கள் மாலைநேரமலே அமர்ந்து ரசிக்கும் மனநிலை லே இருக்கும் எங்களுக்கு அதுதான் பொழுதுபோக்கும் கூடுகளில் இருக்கும் குஞ்சுகள் என்னாகுமோ என்ருகவலையாகவும் இருக்கும் மனிதன் தன வசதிக்கு மின்சாரம் கண்டுபிடிச்சான் ஆனால் அதுபிற உயிர்களுக்கும் கஷ்டமா இருக்கே , நாமும் அடிமையாகிவிட்டோம் எல்லா எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேன் AC TV

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  இவரை நான் சந்திக்கவேண்டும் என்று மகாராஷ்டிர மாநில சென்று அவரின் வீட்டிற்கு சென்றுள்ளேன், நீங்க இங்கே ஆச்சரியப்பட்டு சொல்லியதை விட நான் அதிர்ந்து போனேன் என்பது தான் நிதர்சனம், இவரே இப்படி என்றால் கருநாடக மாநிலம் குப்பி என்றொரு ஊரில் கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவரும் நமக்கு நாமே என்று வாழ்ந்து வருகிறார்கள் அவர்களை பற்றி இவர் கூறியதும் நான் வெட்கி தலைகுனிந்தேன் ஏனெனில் குப்பி எனக்கு 34 கிமி இல் இருக்கு

 • Ashwanth - TIRUCHIRAPPALLI,இந்தியா

  அருமை அம்மா. உங்கள் வாழ்க்கை முறை புரிகிறது. ஆனால் நங்கள் ஆடம்பரம் என்ற போர்வையில் மூழ்கிவிடோம். எங்களால் ஒரு நிமிடம் பவர் இல்லாமல் வாழ முடியாது . முயற்சி எடுத்தாலும் தோல்வி நிச்சயம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement