Advertisement

கண் சிவந்த போலீசார்!

கண் சிவந்த போலீசார்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் அவசர எண்ணுக்கு, சமீபத்தில் தகவல் வந்தது.அன்று நள்ளிரவு முதல், அதிகாலை வரை, போலீசார், ரயில்வே அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், விடிய விடிய சோதனையிட்டனர். சோதனையில், வெடிகுண்டு ஏதும் இல்லை என, தெரிய வந்தது.இதையடுத்து, போன் செய்த நபரை, போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் அவர், தன் நண்பரை பழி வாங்க, இது போன்று மிரட்டல் விடுத்ததாக, வாக்குமூலம் கொடுத்தார்.துாங்காமல், கண் சிவந்திருந்த போலீசார், 'உனக்கும், அவனுக்கும் உள்ள பிரச்னையில், எங்களை, ஏன்டா படுத்துனீங்க...' என, அந்த ஆசாமியை, நன்கு, 'கவனித்து' அனுப்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement