Advertisement

நாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா?

'ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்...' என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு, கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்பதை, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் நிரூபித்துள்ளார்.கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கமல் பிரசாரம் செய்தார்.இஸ்லாமியர் அதிகமாக வாழும், பள்ளப்பட்டி பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டவர், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து... அவரது பெயர், நாதுராம் கோட்சே.'காந்தியின் கொள்ளுப் பேரனாக என்னைக் கருதுகிறேன். அவரது கொலையின் பின்னணி எனக்கு தெரியும்...' என, சர்ச்சையை கிளப்பும் வகையில், சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார்.தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், இடைத்தேர்தலில், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா... தொகுதிக்கு செயல்படுத்தக்கூடிய, நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை, விளக்கி இருக்க வேண்டும். இல்லையேல், ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் வஞ்சகம் குறித்து, மக்களிடம் தெளிவுப்படுத்தி இருக்கலாம்.அதைவிடுத்து, மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வகையில், இந்த தேர்தலுக்கு, எந்த வகையிலும் தொடர்பில்லாத, 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து...' எனக் கூறியிருப்பதால், அவரின் நோக்கத்தை, சந்தேகிக்க வேண்டியுள்ளது.ஊழல்வாதிகளைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். மத மோதலை துாண்டும் விதத்தில் பேசிய கமலுக்கு, சில கேள்விகள்...'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே விளித்துக் கொள்கிறீர்கள். இந்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த, காந்தி, தன்னையே வருத்திக் கொண்டார் என்பது தெரியுமா?


'நவகாளி' கலவரத்தை தடுக்க, கோல்கட்டாவில், இஸ்லாமியர் வீட்டில் தங்கி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், காந்தி. அங்கு, ஆத்திரத்தோடு வந்த ஒருவர், 'என் குழந்தையை, அவங்க கொன்னுட்டாங்க... அதனால, பதிலுக்கு நானும், ஒரு இஸ்லாமிய குழந்தையை கொன்னுட்டேன்' என்றார்.மிகுந்த வருத்தமடைந்த காந்தி, 'இதற்கு பிராயச்சித்தமாக, ஒரு இஸ்லாமிய குழந்தையை, நீதத்தெடுத்து வளர்க்கணும். அந்த குழந்தையை, கடைசி வரை, இஸ்லாமிய குழந்தையாகவே வளர்க்கணும்' என்றார்.


அமைதியான தமிழகத்தில், சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற நீங்கள், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஹிந்து' என, சம்பந்தமே இல்லாமல் பேசி, மக்களிடம், பிரிவினையை துாண்டியுள்ளீர்கள்.இப்போது சொல்லுங்கள் கமல்... 'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?


காந்தியை கொன்ற கோட்சே, போலீசாரிடம் சரணடைந்து, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து, துாக்கு தண்டனையை ஏற்றான். இப்போதுள்ள பயங்கரவாதிகள், இப்படியா இருக்கின்றனர்?அரசியல் கொலைக்கும், ஏதுமறியா அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாத தாக்குதலுக்கும், வித்தியாசம் புரியவில்லையே உங்களுக்கு!முன்னாள் பிரதமர், இந்திரா, சுட்டு கொல்லப்பட்டாரே... அதை,சீக்கிய பயங்கரவாதம் என, அசட்டுத்தனமாக பேசுவீரா?கடந்த, 1948 ஜன., 30ல் நடந்த, காந்தியின் கொலையைப் பற்றி பேசும் நீங்கள், கடந்த மாதம், 21ல், இலங்கையில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட, எட்டு இடங்களில், தொடர் குண்டுகள் வெடித்தனவே, அது குறித்து, எந்த மதத்தை விமர்சித்து முழங்கினீர்?அந்த குண்டு வெடிப்பில், அப்பாவிகள், 253 பேர் இறந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம்அடைந்தனர். பதற்றமும், மரண ஓலமுமாய், இலங்கை சுடுகாடாய் இருந்ததே... அப்போது, மவுன விரதம் மேற்கொண்டிருந்தீரா?கடந்த, பிப்., 14ல், ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டத்தில், 'ஜெய்ஷ்- - இ- - முகம்மது' என்ற, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில், நம் இந்திய பாதுகாப்பு படையினர், 40 பேர் கொல்லப்பட்டனரே... அப்போது, மதம் ஏதும், உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா?காந்தியை கொன்றவனும், ராஜிவ் உட்பட, 14 பேரை கொன்றவர்களும், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டோரும், இலங்கையில், 253 பேரை பலி வாங்கியோரும், பயங்கரவாதிகள் தான்!கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த காந்தி கொலை, தற்போது, உங்கள் நினைவுக்கு வந்து, 'ஹிந்து பயங்கரவாதம்' என, விஷத்தை பரப்புகிறீர்கள்... இக்கருத்தை, இப்போது பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன... ஓட்டுக்காகவா?இது, அநாகரிகத்தின் உச்சம்; தேசத்தில், நச்சு விதையை பரப்புவதற்கு சமம்!பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டாம் என, கூறவில்லை; அதைப்பற்றி உரக்க பேசுங்கள். பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும் என, போர்க்குரல் கொடுங்கள்!முஸ்லிம்களுக்கு என, தனி நாடு வேண்டும் என, பாகிஸ்தான் பிரிந்த போதும், இந்தியா, ஹிந்து நாடாகவில்லை.இந்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களால் தான், இந்தியா, இன்னமும் மதச்சார்பின்மை கொள்கையில் நிலைத்திருக்கிறது. ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையை, தேவையின்றி சோதிக்காதீர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், உங்களின் பேச்சுக்கு மயங்கி, ஓட்டளித்தவர்களில், பெரும்பான்மையினர் ஹிந்துக்கள் தான் என்பதை அதற்குள் எப்படி உங்களால் மறக்க முடிகிறது.இந்நாட்டில் கலவரத்தை துாண்டுவது தான், உங்களின் நோக்கமா... நீங்கள் விதைத்த விஷ விதை, இதோ, நாடெங்கும் பரவ துவங்கி விட்டது.'ஹிந்து பயங்கரவாதம்' என்ற சொல், சமூக வலைதளங்களில், முஸ்லிம் பயங்கரவாதிகளின், பயங்கரவாத செயல்களை பட்டியலிட்டு, வெறுப்புணர்வு துாண்டப்படுகிறது.உங்களின் பேச்சுக்கும், இஸ்லாமியர்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, சில பயங்கரவாத அமைப்புகள் நடத்திய, கொடூர தாக்குதல்கள், நினைவுகூரப்படுகின்றன.உங்களின் ஒரு வாசகம், ஹிந்து மக்களிடம் கோபத்தையும், இஸ்லாமியர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாத நேரத்தில், அவசியமில்லாத உங்கள் பேச்சு... இந்த தேச ஒற்றுமையின் மீது, கத்தி வீசியுள்ளது.உங்களைப் போல, விஷமத்தனமாக பேசுவோரை, முளையிலேயே, கிள்ளி எறிய வேண்டும். அதற்கு சட்டம், வழிவகை செய்ய வேண்டும்!

சி.கலாதம்பி

தொடர்புக்கு:

இ-மெயில்:sureshmavin@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Darmavan - Chennai,இந்தியா

  இவனுக்கு ஓட்டளித்த இந்துக்கள்தான் உண்மையான துரோகிகள்.இதுவே அவனுக்கு மேலும் இந்துக்களை பழிக்க உற்சாகம் தரும் .என்று திருந்தும் இந்த இந்து கூட்டம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பிறவிகள்..இனிமேலாவது திருந்துமா?

 • madhavan rajan - trichy,இந்தியா

  காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்லி காந்திக்கு மிகவும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். இதற்கு கோட்ஸே சுட்டதே பரவாயில்லை. வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து பல பெண்களிடம் உறவு வைத்திருந்த இவரைப் போன்ற கொள்ளுப்பேரன் தனக்கு கிடைப்பார் என்று தெரிந்திருந்தால் கோட்ஸே சுடும் முன் அவரே தற்கொலை செய்து கொண்டிருப்பார். ஹே ராம்

 • prem - Madurai ,இந்தியா

  நான் ஏற்கனவே சொன்னது தான். கூத்தாடிகளை அனுமதித்தால் அவர்கள் தேசத்தை நாசப்படுத்தி விடுவார்கள். அதிலும் இவன் நான்காம்தரமான ஆள், செயலிலும், பேச்சிலும், நடவடிக்கையிலும் எண்ணத்திலும் மிகவும் மட்டமானவன். ஒழுக்கம் இல்லாதவன். மிருகம் போல சுபாவம் கொண்டவன். இவன் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறான்.... முறைதவறிய வாழ்க்கை வாழ்ந்தபின்னும் தன்னை மனிதனாக எண்ணிக்கொள்வது அவனது அறிவீனம்...இவன் சமூகத்தை பீடித்த பெருவியாதி..... வேர் விட்டு வளர்ந்து விட்ட கான்சர் கட்டி.... முதலில் அப்புறப்படுத்த வேண்டியவன்...

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Kamalahaasanum dinakaranum arasiyalai vittae odavum kujanihanth arasiyalukku varave koodaathu ithuthaan makkall theerppu

 • Sabesh - Hindustan,இந்தியா

  உளறும் ka'மல'ஹாசனை இந்தியாவை விட்டே விரட்டவேண்டும்....

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  What is the use of Kamal when he is not even able to get 5% votes in Tamilnadu. This Election must be a lesson to Dinakaran to act and think for the welfare of people and ADMK Party without enmity and Kamal to talk on his efforts to remove peoples problems and not History which is of no use for the people. Dinakaran not only spoiled him but also many ed MLAs and not getting even a single seat after proclaiming AMMK to win all seats of MLAs. Tamilnadu people have the exit gate for Dinakaran from Politics.

 • sampath - Qatar,கத்தார்

  இந்த கடைஞ்செடுத்த அய்யோக்கியன மதிச்சு பதில் எஸுத்தினா நமக்குத்தான் கேவலம் தாயை தவிர மற்ற யாரோடுவேண்டுமானாலும் உடல் உறவு கொள்ளலாம்னு சொன்ன நாதாரிங்க இவன் சினிமாவுல பொரிக்கிதின்னுபுட்டு இப்ப மீதி காலத்தை நாலு கூலிங்கல கூட வெச்சிக்கிட்டு எதோ அரசியல் என்னும் பெயரில் காலம் தள்ளலாம்னு நினைக்கிறான் மக்கள் சரியான பாடம் புகட்டி துரத்தி அடிக்கணும்

 • G.Krishnan - chennai,இந்தியா

  ""சி.கலாதம்பி"" அவர்களின் கருத்து நூறு சதவிகிதம் உண்மை . . . . . . . கமலஹாசன் குடும்பத்தில் உள்ளவர்கள் கிறிஸ்துவமதத்துக்கு மாறி விட்டதாக செய்திகள் வருகிறது . . . . .இவரோ மதம் சாராதவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் அப்படியானால், . . . . . . இந்து மதத்தை மட்டம் தட்டி பேச இவருக்கு உரிமையில்லை . . . . . . இரண்டாம் தர அரசியல் வாதிகளை விட மட்டமாக பேசியிருக்கிறார் கமல் . . . . . .படிப்பறிவும் இல்லை, . . . .பட்டறிவும் இல்லை, தனிமனித ஒழுக்கமும் இல்லை . . . .தமிழ்நாட்டின் சாபக்கேட்டில் இவரும் ஒருவர்.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  கூத்தாடிகளுக்கு சேவை செய்வது இருக்கட்டும். காமராஜருக்குப் பின் தமிழ் நாட்டில் கட்டிய அணைகள் எத்தனை? யார் கட்டினார்கள்? இருக்கும் அணைகளை காப்பாற்றியது யார்? மாற்றம் வேண்டும். இருப்பவர்கள் மாறினால் தான் மாற்றம் வரும். பழைய டமாரத்தில், டோபுக், டோபுக்குனு தான் சத்தம் வரும்.. தோலை மாற்றி வார் பிடுச்சத்தான் கொட்டு சத்தம் கேட்கும்.சிந்தியுங்கள், சகோதரர்களே.

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  இதுவரை நீங்கள் இருவர் மட்டுமே குறை கூறியிருக்கீறீர்கள். ஆயிரம் பேர் படித்திருக்கலாம். யாரும் குறை சொல்லவில்லை என்றால் உண்மை என்று தான் பொருள். நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதான். இனிமேலாவது உண்மையினை தெரிந்து கொண்டு எழுதுங்கள். கட்டுரையரளரின் சொற்களே தவறானவைகளாக, தான்தோன்றித்தனமாக எழுதியதாக இருக்கிறது. கமலை தெரிந்து கொண்டு அல்ல, புரிந்து கொண்டு பேசுங்கள். புரியும் வரை அமைதியாக இருங்கள். தீவிர பக்தியுள்ளவனை என்னவென்று சொல்வது? பக்தியினால் தன்னைத்தானே வருத்திக்கொள்வது இல்லையா? கடவுளுக்கு தன்னை அர்ப்பணிப்பது இல்லையா? அது சரிதான் என்பவர்கள், தேசத்தின் மீது தீவிர பற்று வைத்திருக்கும் தேசபக்தர்களை தீவிர தேசபக்தர் என்பதில்லையா? தீவிர தேசபக்தி இருப்பவர்களை என்னவென்று சொல்வது? அஹிம்ஸை எனும் பெயரில் ஆகாத செயல் செய்பவரை என்ன செய்வது? நீண்ட காலப்போக்கில் ஒரு இனத்துக்கு நெடுந்துன்பம் வரக்கூடாது என்றுதான் அந்த பாதகச்செயல் செய்யப்பட்டது. செய்தவருக்கும் செத்தவருக்கும் நேர்பகை இல்லை. நம் நலனுக்காகத்தான் செய்தது. காந்தி நியமித்த நேருக்கு பதிலாக ஸுபாஸ் ஜி இருந்திருந்தால், இன்று காமன்வெல்த் நாடுகள் நம் வசம் இருந்திருக்கும். சிந்தித்துப்பார்த்தால், சொன்னது சரி எனப்படும்.. நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement