Advertisement

'கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு!'


'கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு!'
கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், கந்தசாமியை ஆதரித்து, துணை முதல்வர், பன்னீர்செல்வம், பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டையில், சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.பிரசார இடம் அருகே, மேடை அமைக்கப்பட்டு, ஆடலும், பாடலும் களைகட்டியது. மது போதையில் இருந்த, அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், ஆட்டத்தில் பங்கேற்றனர்.பிரசார இடத்திற்கு, துணை முதல்வர் வந்தது கூட தெரியாமல், அவர்களின் ஆட்டம் தொடர்ந்தது. 'துணை முதல்வர் வந்துட்டார்... ஆடுறதை நிறுத்துங்கள்...' என, நிர்வாகிகள் கூச்சலிட்டனர்; ஆனாலும், ஆட்டம் நின்றபாடில்லை.பாடல்களை நிறுத்தி, போதை நிர்வாகிகளை உலுக்கிய பிறகு தான், ஆட்டம் நின்றது. அங்கிருந்த வயதான, கட்சித் தொண்டர் ஒருவர், 'ஜெ., போன பின், கட்சியில் ஆட்டம் அதிகமாகிடுச்சு...' என்றபடியே, நடையைக் கட்டினார்.


'இப்போ,15 காசு இருக்கா?'

துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர், சண்முகையாவை ஆதரித்து, அக்கட்சித் தலைவர், ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அவர் பேசுகையில், 'கடந்த தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும், மோடி நிறைவேற்றவில்லை. 'ஏழை, எளிய மக்களின், வங்கிக் கணக்கில், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும்' என்றார். 15 காசாவது போட்டாரா?' என, கேள்வி எழுப்பினார்.முதியவர் ஒருவர், 'ஒரு ரூபாய்க்கு, மூணு படி அரிசி முதல், 2 ஏக்கர் நிலம் இலவசம் வரை, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா... வாக்குறுதி பற்றி, யாரு பேசுறதுன்னு வரைமுறையே இல்லாம போயிடிச்சு...' என்றார்.அருகில் இருந்த இளைஞர், 'அது கிடக்கட்டும் தாத்தா... 15 காசு எல்லாம் இப்போ இருக்கா...' என்றதும், அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

எம்.பி., 'கெட்டப்'பில் கலாநிதி!

தி.மு.க., சார்பில், வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ள, கலாநிதி, அத்தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில், பேனர்களில், போஸ்டர்களில், அடிக்கடி தென்படுகிறார்.சமீபத்தில் நடந்த, எண்ணுார் பர்மா நகர், தீமிதி திருவிழாவில், சிறப்பு விருந்தினராக, கலாநிதி, நேரடியாக பங்கேற்றார். அப்போது, நிருபர் ஒருவர், 'என்னது இது... தேர்தல் ரிசல்ட்டே வரலை... அதுக்குள்ள, தி.மு.க., - எம்.பி., வேட்பாளர், தொகுதியில நடக்குற எல்லா நிகழ்ச்சியிலயும் கலந்துக்கிறாரு...' என, சக நிருபர்களிடம் கேட்டார்.அதற்கு பதிலளித்த மூத்த நிருபர், 'வட சென்னையில, தி.மு.க.,வுக்கு எதிரா, வலுவான நபர் யாரும் போட்டியிடலை. அதனால, 'நாம தான் ஜெயிப்போம்'ன்னு, மெதப்புல இருக்காரு கலாநிதி... இதுல தப்பில்லை. ஆனா, வெற்றி கிடைச்சாச்சுன்னு உறுதியான பின், தொகுதியை மேம்படுத்த பாடுபட்டார்ன்னா, மெச்சலாம்... இல்லேன்னா, தொகுதி மக்கள் தலையெழுத்து அவ்வளவு தான்னு, நாம எழுதுவோம்...' எனக் கூறியபடி, நடையைக் கட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Munbu se kuppusaami vadachennai empyaagairukumpothu onnum seiyavillai paaraalumanrathil olungaagakooda pesavillai

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கூட்டம் சேர்த்தவர்கள் து. முதல்வர் வருகிறார் என்று அதிகமாகவே ஊற்றிக்கொடுத்தார்கள் போலிருக்கிறது நீங்கள் ஓடவிட்ட ‘சரக்கு’ ஆட்டமும் போடும், ஆட்சிக்குத் தள்ளாட்டமும் கொண்டு வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement