Advertisement

'குண்டக்க மண்டக்க பேசுறீங்களே பா!'

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி தலைமையில், செயல் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பின், அவர் கூறுகையில், 'பருவ மழை பொய்த்துவிட்டது. அதனால், சென்னையில் தண்ணீர் பஞ்சம் உள்ளது என, தமிழக அரசு கூறுவது சரியல்ல. பருவ மழையை நம்பி, மக்கள் இருக்கலாம். மழை பெய்யாவிட்டாலும், மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும்' என்றார்.

அங்கிருந்த, குசும்புக்கார நிருபர் ஒருவர், 'தொண்டர்களை நம்பி, கட்சி இருக்கலாம்... ஆனால், ஒரு குடும்பத்தை மட்டுமே நம்பி இருக்கக் கூடாதுன்னு, காங்கிரசார் புரிஞ்சுக்கணும்' என்றார்.
அருகிலிருந்த, மூத்த நிருபர், 'காங்., தலைவரு, நல்ல கருத்தைச் சொன்னாலும், 'குண்டக்க மண்டக்க' பேசுறீங்களே பா...' என்றபடியே, நடையைக்கட்டினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மழை பொய்த்ததும் அரசின் ஏற்பாடுகளும் பேசப்பட்ட இடத்தில் குடும்ப அரசியல் வருவானேன் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement