Advertisement

'முகத்தை எங்கே வச்சுப்பாங்களோ...!'

'முகத்தை எங்கே வச்சுப்பாங்களோ...!'

பெரம்பலுார் மாவட்டம், அரியலுாரில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இ.கம்யூ., கட்சியின், தமிழக மாநில செயலர், முத்தரசன் சென்றிருந்தார்.அங்கு, நிருபர்களை சந்தித்த அவர், 'ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கும், அந்தக் கருத்தை மறுப்பதற்கும் உரிமை உள்ளது. ஆனால், வன்முறைக்கு இடம் கிடையாது. நடிகர் கமல் பேசும் கூட்டங்களில், வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும், அவர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசு செயல்படுவதையும் ஏற்க முடியாது' என்றார்.அதோடு, 'தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. யாருடைய நிர்ப்பந்தத்திற்கோ உள்ளாகி வருகிறது. மக்களின் தீர்ப்பு, மோடிக்கு எதிராக இருந்தால், அதை மாற்றுவதற்கு, தேர்தல் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வரோ என்ற அச்சமும்,கவலையும் உள்ளது' என்றார்.இதைக் கேட்ட நிருபர்கள் சிலர், 'ஒருவேளை, இவங்க கூட்டணிக்கு ஆதரவா, தேர்தல் முடிவுகள் வந்தால், முகத்தை எங்கே வச்சுப்பாரோ...!' என, 'கமென்ட்' அடித்து சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sundar - Chennai,இந்தியா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பேட்டைக்குப்பேட்டை நிலைப்பாடை மாற்றுவார்கள் கம்ம்யூனிஸ்ட்கள் கேட்டால் இதுதான் அரசியல் என்று புது சித்தாந்தம் பேசுவார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement